Wednesday, 30 May 2012
Friday, 19 September 2008
Option for the Marginalised J. Ragu Antony
To talk today about the tsunami of 2004 is, it seems, like flogging the proverbial dead horse: what once shook the world is no longer news; the media after feasting on tsunami news has spat it out like an overchewed tobacoo stub and has turned to feed on other sensational matters; the state has reverted to its actual agenda of appeasing dominant vote banks; other people have resumed their routines; elections are held; budgets are tabled; life goes on. But unfortunately for the tsunami victims, especially for fisher folks of Kanyakumari district, life offers no hope. They are still left clueless.
Thursday, 11 September 2008
அறிந்திராத கடல் - எம். வேதசகாயகுமார்
கடல் குறித்த அறிவு சமகாலத் தமிழில் இல்லை. பெரு நகரங்களில் ஒட்டுமொத்த மீன்களின் பெயர்கள் மூன்று அல்லது நான்காகச் சுருக்கப்பட்டுள்ளன. சில நூறு மீன்களின் பெயர்களைத் தமிழ் இழந்துவிட்டுள்ளது. இந்த இழப்பு தொடர் கிறது. இந்த நிலை சமவெளி மனிதர்களிடம்தான் உள்ளது என்பதல்ல. கடலோர மனிதர்களும் கடலுக்கு அன்னியமாகிக் கொண்டிருக்கிறார்கள். கடல் குறித்தான அறிவை அழிவிலிருந்து மீட்டாக வேண்டும்.
சொல்லோவியமாகும் கடலின் இரகசியங்கள் - பிரான்சிஸ் ஜெயபதி.சே.ச.
அறிவியல் ஓர் அறிவுத் தேடல்; உலகின் கூறுகளை ஒட்டு மொத்தமாகவும் நுண்கூறுகளாகவும், புரிந்துகொள்ள உதவும் தேடல். நாம் வாழும் உலகு, மண்ணாகவும் நீராகவும் காற்றாகவும் நம்முடைய அன்றாட வாழ்வனுபவங்களை ஒட்டிய மனப் படிமங்களாகவும் உள்ளன. ஆனால் இவை அத்தனைக்கும் எல்லை கட்டியபடி இருப்பது கடல். உலகம் ஆழியால் சூழப் பட்டுக் கிடக்கிறது.
மனிதனைத் தேடும் பாதை- யாழன் ஆதி
வறீதையாவின் கட்டுரைகள் ஒவ்வொன்றும்
படித்துமுடித்தவுடன் நான் யார் என்ற கேள்வியை
உள்ளுக்குள் எழுப்புகின்றன.
மனிதனைத் தேடும் பாதை- யாழன் ஆதி
சிலுவையைத் தோள்மாற்றக்கூட ஆளில்லை! கடலின் தொப்புள்கொடி ப.சிவகாமி
இருபத்தெட்டு ஆண்டுகள் அய்யேயெஸ் அதிகாரியாகப் பணி யாற்றியதையும் அதற்கான பல பயிற்சிகள் மேற்கொண்டதையும் வறீதையா கான்ஸ்தந்தினின் ‘கரைக்கு வராத மீனவத் துயரம்’ என்ற கட்டுரைத் தொகுப்புக்கு அறிமுக உரை எழுதும் போது நினைத்துப் பார்க்கிறேன். ஓர் ஆறுமாத காலம் தமிழக அரசின் கால்நடை மற்றும் மீன்வளத்துறையின் செயலாளராகப் பணியாற்றிய காலம் தவிர, வேறெந்த சந்தர்ப்பத்திலும் மீனவர்கள் பற்றிக் கேள்விப்பட்டதாகவோ விவாதித்ததாகவோ ஞாபக மில்லை. ஏழை மக்கள் என்ற பொது கொட்டிலில் தலித், மீனவர், பழங்குடி மக்கள் அடைக்கப்பட்டு, வெகு மேலோட்ட மான கூட்டங்கள் எவர் மனமும் புண்படாவண்ணம் நடத்தப் பெறும். மற்ற பூர்வகுடியினரைப்போல மீனவர்களின் வாழ்வு, அரசியல், பண்பாடு, பொருளாதாரம் ஆகியவை அரசுத்தரப்பில் பொதுவான தளத்தில் விவாதிக்கக்கூடிய அளவில் எப்போதும் இருந்ததே கிடையாது. இது எனக்கு திகைப்பை உண்டாக்குகிறது.
துள்ளும் மீன்களும் தொடரும் வன்முறையும்-ஒரு மீளாய்வு - அரங்க மல்லிகா
வரலாறுகள் மக்களின் வாழ்க்கைத்தரத்தைக் காட்சிப்படுத்த வேண்டும். ஏற்கனவே கற்பிதம் செய்யப்பட்டுள்ள பண்பாடுகள் ஒரு மாயைத் தன்மையைக் கற்பித்துள்ளன. இதற்கு இலக்கியங்கள் ஆவணங்களாகத் திகழ்கின்றன. இலக்கியங்களின் பொதுத்தன்மையை விலக்கி, விளிம்பார்ந்த மக்களின் மொழி, செல்லாடல்களில் பொதுத்தன்மையை விலக்கி, விளிம்பார்ந்த மக்களின் மொழி, செல்லாடல்களில் புதைந்துள்ள விழுமியங் களை, மறைக்கப்பட்ட வாழ்வனுபவங்களைக் கூழாங்கல்லை உருட்டி ஒடும் தெளிந்த நீரின் தன்மைபோல சமூக இயங்கு தளத்திற்கு எடுத்துக்காட்ட வேண்டிய ஒரு பணியை வறீதையா கான்ஸ்தந்தின், எம். வேதசகாயகுமாரின் ‘விளிம்பு, மையம், மொழி’ தொகுப்பு முன்மொழிகின்றது.
மீனவர்க்கான அரசியல் பா.வீரமணி
நசுக்கப்படும் இனத்தின் துயரம் இந்நூலில்
வெடித்த நிலம் போல் வெம்மையாய்க் காட்சியளித்தாலும்
போகவேண்டிய பாதையையும் இந்நூல்
துலக்கமாகக் காட்டுகிறது.
மீனவர்க்கான அரசியல்
பா.வீரமணி
Monday, 1 January 2007
Monday, 5 June 2006
பலிசோறாக வீசியடிக்கப்படும் மீனவர் வாழ்வு - மாலதி மைத்ரி
‘கடலுக்கு முகத்தையும் நிலத்துக்கு முதுகையும் காட்டிப் பழகிய’ மீனவப் பெருங்குடி மக்களின் வசதிக்காக ஒருவேளை சட்டசபையும் பாராளுமன்றமும் கடலில் அமைக்கப்பட்டிருந் தால், மீனவர்கள் நம் ஆட்சியாளர்களை எளிதாக அணுகியிருப்பார்களோ; மீனவர்களின் வாழ்வியல் துயரமும் இன்னல் களும் குறைய வாய்ப்பிருந்திருக்குமோவென கசந்த நகைப்புக் கிடையே எண்ணத் தோன்றுகிறது.
Sunday, 4 June 2006
கடலோர வாழ்வெனும் கட்டுமரம் - எம். வேதசகாயகுமார்
வறீதையாவின் குரலை ஆழிப்பேரலைக்குப்பின் இயேசு சபை யைச் சார்ந்த ஜெயபதி அடிகளார் ஒருங்கிணைத்த கருத்தரங்கு களில் முதன்முதலாக என்னால் கேட்க முடிந்தது. ஆனால் இக்குரலுக்காக வெகுகாலம் நான் காத்திருந்ததான உணர்வு என்னுள் எழுந்தது. வறீதையாவுடனான என் நெருக்கத்திற்கு இதுவே காரணமாகலாம். இதற்கு நான் ஜெயபதி அடிகளார்க்கு நன்றி கூற வேண்டும். ஜெயபதி அடிகளாரின் பணியின் முக்கியத் துவத்தை அவர் சார்ந்துள்ள சமய அமைப்பு எந்த அளவிற்கு உணர்ந்துள்ளது என்னும் ஐயமும் என்னுள் எழுகிறது. கடலோர மக்களின் வாழ்வைக் குறித்து, அறிவுத்தளத்தில் உணர்வு ரீதியாக சிந்திக்கும் ஒரு குரலைக் கருத்தரங்கு எனக்கு அறிமுகப்படுத் தியது. ஒரு சமூகம் குறித்ததான சிந்தனை, அச்சமூகத்திலிருந்து தான் எழ வேண்டும். அச்சமூகம் சிந்திக்கத் துவங்குகிறது என்பதற்கான அறிகுறி இது. சமூகச் சிந்தனை ஒருங்கிணைக்கப் படும்பொழுது செயல்தளம் தானாக உருக்கொள்ளும். எந்த ஒரு மாற்றத்தினையும் வெளியிலிருந்து புகுத்திவிட முடியாது.
Saturday, 3 June 2006
Friday, 2 June 2006
Thursday, 1 June 2006
கடலும் நிலமும் : ஒரு மறுவாழ்வுத் தேடல்-ஹெச்.ஜி.ரசூல்
இயற்கைப் பேரிடர்களான பூகம்பம், நிலச்சரிவு, சூறாவளி, பெருவெள்ளம், சுனாமித் தாக்குதல் ஆகியவை பல்லாயிரக் கணக்கில் உயிர்களை எதிர்பாரா நிலையில் பலிவாங்கியுள்ளன. இதற்கொரு இணைதளத்தில் அணுகுண்டு வெடிப்புகளாலும் யுத்தங்களாலும் ஏவுகணை வீச்சுகளாலும் ஆக்ரமிப்பின் கொலை வெறித் தாண்டவங்கள் திட்டமிட்டே செயல்படுத்தப்பட்டு உயிர்களையும் வாழ்வையும் அழித்துள்ளன. குழந்தைகளையும் பெண்களையும் திரிசூலமுனைகளில் பலிவாங்கிய பயங்கர வாதத்தின் அச்சுறுத்தல் குஜராத்தில்கூட வெளிப்பட்டது. உயிர்கள் பலிவாங்கப்படும் இச்சம்பவங்கள், ஒருபுறம் இயற்கை இருப்பின் சமன்குலைவினாலும் மறுபுறம் சமுதாய இருப்பின் சமன்குலைவினாலும் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. எதிர்பாராதது திட்டமிடப்பட்டது என்பதான இரண்டு நோக்கங்கள் இச் சம்பவங்களில் தொழிற்படுகின்றன.
Tuesday, 25 April 2006
உணவு தரும் சமூகமும் நுகரும் சமூகமும் - செந்தீ நடராசன்
ஒரு பேரிடரும் அதைத் தொடர்ந்த சமூகச் சிக்கல்களும் கட்டமைப்பு முயற்சிகளும் முற்றாக ஒரு நிரந்தர, உறுதியான வாழ்க்கைக் கட்டமைப்பை நோக்கிய பலதரப்பினரின் சிந்தனை களை பேராசிரியர் வறீதையாவும் அருட்திரு. ஜஸ்டஸ§ம் மனோரீதியான ஈடுபாட்டுடன் தங்கள் எண்ணங்களை ஆவணப் படுத்தியிருக்கிறார்கள். ஆழிப்பேரிடருக்குப் பின் என்னும் இந்த ஆவணத்தை வாசிக்கையில் நான் நாற்காலிச் சிந்தனை யாளனாக உணர்கிறேன்.
Friday, 31 March 2006
அலையாத்திகாடுகளில் நுழைந்து திரியும் பட்டாம்பூச்சிகள் ஹெச்.ஜி.ரசூல்
அலையாத்திகாடுகளில் நுழைந்து திரியும் பட்டாம்பூச்சிகள் : முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அளித்த ‘நெய்தல் மண்ணுக்கோர்சாசனம் - எழுத்தாளர் ஹெச். ஜி. ரசூல் திண்ணையில் எழுதிய பதிவு.
Tuesday, 6 September 2005
புறக்கணிக்கப்படும் பூர்வீக மீனவக் குடிகள் - ஆ. சிவசுப்பிரமணியன்
நீண்ட கடற்கரையைத் தமிழ்நாட்டிற்கு இயற்கை வழங்கி யுள்ளது. ஆற்றங்கரை நாகரிகத்தை அடுத்த வரலாற்றுத் தொன்மை கடற்கரை நகரங்களுக்கும் அங்கு வாழும் குடி களுக்கும் உண்டு. தமிழகத்தைப் பொறுத்தவரையில் தென் மாவட்டங்களின் கடற்கரைப்பகுதியானது தொன்மைச் சிறப் புடையது. மதிப்புமிக்க முத்துகள் ஒரு காலத்தில் இப்பகுதியில் கிடைத்தன. இதன் அடிப்படையிலேயே இராமேஸ்வரம் தொடங்கிக் கன்னியாகுமரி வரையிலான கடற்கரைப்பகுதி ‘முத்துக் குளித்துறை’ என அழைக்கப்பட்டது.
Tuesday, 26 October 2004
மனநிலைகள் மாறவேண்டும்-ஐசக் அருமைராஜன்
கடற்கரை உலகம் வித்தியாசமானது. அழகானதும் கூட, ஆனால் அலைகடல் ஓரம் சின்னஞ்சிறு குடிசைகளிலோ, வீடுகளிலோ வாழ்கிற கடலோடிகளின் வாழ்க்கையில் அழகுமில்லை, அடிப் படை வசதியுமில்லை. நினைத்துப் பார்க்கையில் வெட்கம் பிடுங்கித் தின்னுகிறது நம்மை. ஆனால் சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டுகளைத் தாண்டிய பிறகும் அவர்களின் வாழ்வு பின்தங்கியே இருப்பது கண்டு எந்த அரசும் வெட்கப்பட வில்லை என்பதே இன்னும் வெட்கமானது.
Friday, 2 January 2004
Thursday, 30 December 1999
Comprehensive Water Policy-Need of the Hour - M. Devaraj
The papers presented in this Workshop address various water issues at the macro and nicrolevels. They call for both individual and collective action for the conservation of water resources. There is emphasis on the need to ensure water quality for sustained human use including replenishement of denuded forests and restoration of soil health. Large number of case histories have been cited providing moral lessons for emulation at the local levels so that such actions build up into a global movement for judicious water use and management.
Subscribe to:
Posts (Atom)
விடியலை நோக்கி 2008 நேர்காணல்
--------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...
-
* கையறுநதி / - வறீதையா கான்ஸ்தந்தின்/ கடல்வெளி வெளியீடு/ பக்கங்கள் : 196 விலை : ரூ. 220/-. நூல் அறிமுகம் : செ.கா. --------------------...
-
--------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...
-
#300daysafterCycloneOckhi #VareethiahKonstantine Mass casualties in the deep sea due to Cyclone Ockhi 2017 expose the fatal inad...




