நீண்ட கடற்கரையைத் தமிழ்நாட்டிற்கு இயற்கை வழங்கி யுள்ளது. ஆற்றங்கரை நாகரிகத்தை அடுத்த வரலாற்றுத் தொன்மை கடற்கரை நகரங்களுக்கும் அங்கு வாழும் குடி களுக்கும் உண்டு. தமிழகத்தைப் பொறுத்தவரையில் தென் மாவட்டங்களின் கடற்கரைப்பகுதியானது தொன்மைச் சிறப் புடையது. மதிப்புமிக்க முத்துகள் ஒரு காலத்தில் இப்பகுதியில் கிடைத்தன. இதன் அடிப்படையிலேயே இராமேஸ்வரம் தொடங்கிக் கன்னியாகுமரி வரையிலான கடற்கரைப்பகுதி ‘முத்துக் குளித்துறை’ என அழைக்கப்பட்டது.