Tuesday, 26 October 2004

மனநிலைகள் மாறவேண்டும்-ஐசக் அருமைராஜன்


கடற்கரை உலகம் வித்தியாசமானது. அழகானதும் கூட, ஆனால் அலைகடல் ஓரம் சின்னஞ்சிறு குடிசைகளிலோ, வீடுகளிலோ வாழ்கிற கடலோடிகளின் வாழ்க்கையில் அழகுமில்லை, அடிப் படை வசதியுமில்லை. நினைத்துப் பார்க்கையில் வெட்கம் பிடுங்கித் தின்னுகிறது நம்மை. ஆனால் சுதந்திரம் பெற்று அரை நூற்றாண்டுகளைத் தாண்டிய பிறகும் அவர்களின் வாழ்வு பின்தங்கியே இருப்பது கண்டு எந்த அரசும் வெட்கப்பட வில்லை என்பதே இன்னும் வெட்கமானது.


நாட்டுக்கு மின்சாரம் வேண்டும். ஆனால் அதை அனு பவிக்க மக்களும் வேண்டும். இருப்பார்களா?

அறிவர் வறீதையா கான்ஸ்தந்தினின் ‘நெய்தல் சுவடுகள்’ காலத்தின் கட்டாயம். ஆய்வோடும் அழகோடும் செய்தி களைத் தருகிறார். நடையில் தொய்வு இல்லை; காட்டத்திலும் ஒரு கவர்ச்சி உண்டு.

“இந்த மண்ணைப் பீடித்த பீடைதான் என்ன?” என்ற கேள்வியை எழுப்புகிறார். பதில் கிடைப்பது எளிதல்ல. “எனக்கு என்ன தருவீர்கள்?” என்று சராசரி மனிதன் கேட்டால் பரவா யில்லை. ஆனால் சேவையில் இறங்கியவர்களும் கேட்டால் நாடு என்னாகும்?

கடல் விளிம்பு சமுதாயத்தை முன்னேற விடாமல் தடுத்த/ தடுக்கிற சக்திகள் யாவை? கடற்புறக் கல்லூரிகளை நகர எல்லைகளுக்குக் கொண்டுபோன மனிதர்கள் யார். இவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல. கல்வி வியாபாரம் கடற்கரை களில் எடுபடாது என்பதைத் தீர்க்கதரிசனமாய் புரிந்துகொண்ட இவர்கள் யார்? கடற்கரைக்குக் கோயில் மட்டுமே; ஆனால் பள்ளிகளும், கல்லூரிகளும் உங்களுக்கில்லை என்று சொல்லித் திட்டமிட்டு கல்வி மறுப்புத் திட்டத்தைச் செயல்படுத்தியவர் கள் யார் யார்? குறிப்பாக குமரி மாவட்டக் கடற்கரைகளைப் புறக்கணித்து, “நீ கடலோடு கிட” என்று சாசனம் எழுதியவர்கள் யார்? வேறு யாருமில்லை; சொல்ல நா கூசுகிறது! சொல்லாம லிருந்தால் என்ன, புரிந்து கொள்ள முடியாத பூஜை மொழி யல்லவே இது!

சுய முயற்சிகளால் முன்னேறிய சிலரும் கூட, “நாங்கள் கடலோரத்திலிருந்து வந்தவர்கள்” என்று கூறத் தயங்குகிற போது, இவர்களால் என்ன நன்மை விளையப்போகிறது?

வறீதையா ஆராய்கிறார். அவர் கூறுகிற செய்திகளை நாம் எடுத்துச் சொன்னால் போதாது. நீங்கள் படித்தே அறிய வேண்டும் பற்பல பரிந்துரைகளையும் அவரே தருகிறார். அரசுகள் கவனிக்குமா என்பதே கேள்வி.
நேர்த்தியை நோக்கி நடந்து செல்ல மீனவர்களுக்கு யார் கற்றுக் கொடுக்கப் போகிறார்கள்? இங்கேயும் ஒரு தெரசா வேண்டும். அவர் கடலோரங்களில் நடந்து செல்லவேண்டும். தன்னையிழந்து இந்த மக்களுக்கு உழைக்க வேண்டும். இது நடக்குமா? நடக்கவேண்டும்!

இடைத் தரகர்களிடமிருந்து மீனவர்களை மீட்டெடுக்கும் முயற்சிகள், ஒரு காலகட்டத்தில் நடந்தன. சேவை நிறுவனங்கள் அந்த முயற்சியில் இறங்கின. ஆனால் ஏன் தோற்றுப் போனார்கள்?

“மீனவர்கள் பேய்க்கும் பெருங்கடலுக்குமிடையே தத்தளிக் கிறார்கள்” என்கிறார் வறீதையா. இந்தப் பேய் யாது? இது முக்கோணப் பேய் என்கிறார் அவர். ஆதிக்கத் திருச்சபை, அரசுகள், இடைத்தரகர்-பெருவணிகர் கூட்டணி என்ற முக்கோணப் பேயிடமிருந்து இவர்களுக்கு விடுதலை தரப் போவது யார்?

திருச்சபை, மீனவர்களின் மீது செலுத்துகிற ஆதிக்கத்தை விட்டுவிட்டு, சேவை மனப்பான்மைக்கு இறங்கியாக வேண்டும்; மீனவர்களைப் புறக்கணித்துவிட்டு பொருளாதாரத்துக்காக மீன்வள வளர்ச்சியில் கண் வைக்கிற அரசுகள் திருந்த வேண்டும். அவை கூட்டுறவு மீன் கொள்முதலுக்கும், சந்தைக்கும் ஆணைகள் பிறப்பித்து நடைமுறைப்படுத்த வேண்டும். இடைத்தரகர்களும், பெரும்வணிகர்களுமாயிருக்கிற கொடூர பேயை விரட்ட பூஜாரிகள் வேண்டாம், திட்டங்கள் வேண்டும். அய்யா, அய்யா தான்!

அரசியல் ரீதியாக மீனவர்களுக்குத் தனித் தொகுதிகள் வேண்டும் என்று கூறிய வேணுகோபால் விசாரணைக் கமிஷன் அறிக்கை கிடப்பில் போடப்பட்டதற்கான காரணங்கள்தாம் என்ன? யார் இதற்குத் தடையாய் நிற்கிறார்கள்? இதில் உள்ளூர்வாசிகள் கூட உண்டு என்பதே உண்மை. வேணு கோபால் கமிஷன் தகுதிவாய்ந்த மீனவர்களுக்கு மாதச் சம்பளத்தில் வேலை தரவேண்டும் என்று கூறிய பரிந்துரை கூட சரியாக நிறைவேற்றப்படவில்லை. மீனவப் பெண்கள் சிலர் இப்போது காவல்துறையில் பணியாற்றுவதாகச் சொன்னார் கள். மகிழ்ச்சி, ஆனால் போதாது.

வேணுகோபால் பரிந்துரைகள் பின்பற்றப்பட்டால் இனி யரு மண்டைக்காடு சம்பவம் ஏற்படக்கூடிய ஆபத்து அறுபது விழுக்காடு குறையும். அரசு கவனிக்க வேண்டாமா?

அரசியல் சமத்துவம் மட்டுமே போதாது. கூடவே பொருளாதார ஏற்றம் வேண்டும். கடலிலிருந்து அவர்கள் அள்ளிக்கொண்டு வருவதில் கூட எத்தனை வகையான சுரண்டல்கள்! ஆனால் அள்ளிக்கொண்டு வருவதில் உள்ள சிரமங்கள் எத்தனை! 

முக்கியமாகச் சேமிப்பு உத்திகளை யாரேனும் இவர் களுக்கு கற்றுக் கொடுத்ததுண்டா? சேமிக்கக்கூடிய வசதிகள் கடற்கரைக் கிராமங்களில் உண்டா? வாழ்க்கை நெறிகளை எந்தப் பள்ளிக்கூடத்தில் படிப்பது? குரல்வளையை நெரித்துக் கொண்டிருக்கும் கந்துவட்டி, பணயக் கடன், சிட்டி, தரகுக் கடன் இவற்றிலிருந்து இவர்களை மீட்க யார் இருக்கிறார்கள்?

மீன் தொழிலில் பெண்களின் ஈடுபாடு முக்கியமானது. பெண்கள் முன்னேறாத ஒரு நாடு அரைகுறை வளர்ச்சி யுடையது. மீன்பதனிடும் தொழிலில் பெண்களின் பங்கு சிறப்பானது. ஆனால் ஊதிய நிரக்கு போன்ற பல பிரச்சினை களை வறீதையா இங்கு ஆய்ந்துள்ளார்.

கடற்கரை கிராமங்களில் மத அடிப்படையிலான காளான் திருச்சபைகள் பல ஊடுருவியுள்ளன. இதன் காரணம் முக்கிய மானது. கத்தோலிக்கத் திருச்சபை நிறுவனத் தன்மை பெற்று மீனவர்களின் மீது தங்கள் ஆதிக்கத்தை நிறுவ முயன்றதன் விளைவே இது. இதனால் தொண்டு நிலை ஒதுக்கப்பட்டு ஆடம்பர வாழ்வு திருச்சபையைப் பற்றிக்கொண்டது. மீனவர் களுக்கு உதவ இந்த நிலை ஒரு தடையே. தொண்டு அல்லது சேவை மீண்டும் உறுதிச் செய்யப்பட்டாக வேண்டும். தெரசா முன்னுதாரணம் அல்லவா?

சுற்றுச்சூழல் கண்ணோட்டத்தில் நம் முன் நிற்கிற முக்கிய பிரச்சினை ஏ.வி.எம். கால்வாய் புனரமைப்பே. ஏ.வி.எம். கால்வாய் தமிழக முதல்வரின் நேரடிப் பார்வையில் பெற்றால் ஒழிய சீராகக்கூடிய வாய்ப்பில்லை. வறீதையாவின் ஆய்வு வருங்காலத்தில் ஏ.வி.எம். கால்வாயைச் சீர்செய்யவும் நன்னீர்த் தேவையைப் பூர்த்தி செய்யவும் நிச்சயம் உதவும் என்று நம்பலாம்.

முத்தாய்ப்பாய் ஒரு செய்தி. பூமி சுரண்டப்படுகிறது. கனிம வளங்களுக்காய் இந்தியா ஏமாற்றப்படுகிறது. ஒரு பக்கம் ஆற்று மணல் வியாபாரம், பூமியின் சமநிலையைப் பாதித்து, வருங்கால சமுதாயத்திற்கு சாவு மணியடித்துக்கொண்டிருக் கிறது. இந்தச் சாவு மணியோசை மெல்ல கேட்கிறது. ஆய்வாளர் களும், மனித நேயம் மிக்கவர்களும் இந்த ஓசையை உற்றுக் கேட்கத் தொடங்கிவிட்டார்கள். கடற்கரை மணற்குவியல்கள் தோண்டப்படும்போது விளையும் விளைவுகளை நூலாசிரியர் தெளிவாக்குகிறார்.

மீனவர்களின் கனவு மீன்பிடித் துறைமுகம். தேங்காய்ப் பட்டணத்தில் மீன்பிடித் துறைமுகம் உருவாக எத்துணை காலம் தேவைப்படும் என்று அறியமுடியவில்லை.

பேராசிரியர் வறீதையாவின் ஆய்வு இன்னும் தொடர வேண்டும். இதுபோன்ற நடுநிலை ஆய்வுகளை பலரும் செய் தாகவேண்டும்.

நூலாசிரியரின் ஆய்வில் மூன்று நிலைகளை நாம் கவனிக் கிறோம் ஒன்று-மனித மனநிலைகள் மாறவேண்டும். இரண்டு-மத நிறுவனங்களின் மனநிலைகளில் மாற்றம் வேண்டும். மூன்று-மத்திய, மாநில அரசுகளின் மனநிலையிலும் போக்கிலும் மாற்றங்கள் வேண்டும்.

கடலே நீ வாழி-நீயே
பூமியைப் பாதுகாக்க
இறைவனின் அருங்கொடை!

ஐசக் அருமைராஜன்
64/1 இன்னாசித் தெரு,
ராமன்புதூர் சந்திப்பு,
நாகர்கோயில்-629 002,
26.10.2004.

No comments:

Post a Comment

விடியலை நோக்கி 2008 நேர்காணல்

  --------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...