Showing posts with label ப.சிவகாமி.கரைக்கு வராத மீனவத் துயரம். Show all posts
Showing posts with label ப.சிவகாமி.கரைக்கு வராத மீனவத் துயரம். Show all posts

Thursday, 11 September 2008

சிலுவையைத் தோள்மாற்றக்கூட ஆளில்லை! கடலின் தொப்புள்கொடி ப.சிவகாமி


இருபத்தெட்டு ஆண்டுகள் அய்யேயெஸ் அதிகாரியாகப் பணி யாற்றியதையும் அதற்கான பல பயிற்சிகள் மேற்கொண்டதையும் வறீதையா கான்ஸ்தந்தினின் ‘கரைக்கு வராத மீனவத் துயரம்’ என்ற கட்டுரைத் தொகுப்புக்கு அறிமுக உரை எழுதும் போது நினைத்துப் பார்க்கிறேன். ஓர் ஆறுமாத காலம் தமிழக அரசின் கால்நடை மற்றும் மீன்வளத்துறையின் செயலாளராகப் பணியாற்றிய காலம் தவிர, வேறெந்த சந்தர்ப்பத்திலும் மீனவர்கள் பற்றிக் கேள்விப்பட்டதாகவோ விவாதித்ததாகவோ ஞாபக மில்லை. ஏழை மக்கள் என்ற பொது கொட்டிலில் தலித், மீனவர், பழங்குடி மக்கள் அடைக்கப்பட்டு, வெகு மேலோட்ட மான கூட்டங்கள் எவர் மனமும் புண்படாவண்ணம் நடத்தப் பெறும். மற்ற பூர்வகுடியினரைப்போல மீனவர்களின் வாழ்வு, அரசியல், பண்பாடு, பொருளாதாரம் ஆகியவை அரசுத்தரப்பில் பொதுவான தளத்தில் விவாதிக்கக்கூடிய அளவில் எப்போதும் இருந்ததே கிடையாது. இது எனக்கு திகைப்பை உண்டாக்குகிறது. 

விடியலை நோக்கி 2008 நேர்காணல்

  --------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...