Saturday, 13 October 2018

பனையோலை வலை.

பனையோலை வலை.

காட்சன் சாமுவேலின் உமல் (கற்பகத்தரு/ 25) குறித்த பதிவு அருமை. தமிழின அடையாளமான பனை, நெய்தலரின் அன்றாட வாழ்விலும் முக்கியமானது. மடிவலை அறுவடை அளவை மீனவர்கள் உமல் எண்ணிக்கையில் சொல்வதுண்டு. கடலில் இரவுக் குளிருக்குப் போர்வையாகவும் உமல் பயன்படும். உமலின் வடிவம் இடம்தோறும் மாறுபடும். வடதமிழகப் பகுதிகளில் மீனவர்களும் காயல்களில் இறால் தடவும் பெண்களும் சிறு குடுவை வடிவ உமல்களைப் பயன்படுத்துகின்றனர்.
சிங்காரவேலர் ஒரு முறை வழக்குக் கோப்புகளை இம்மீன் குடுவையில் நீதிமன்றத்துக்கு எடுத்து வந்ததாக ஒரு வேடிக்கையான குறிப்பு உண்டு. தென்தமிழகப் பகுதிகளில் புழங்கிவரும் கோழியாமுரல் வலையில் மஞ்சள் நீர் புரட்டிய பனங்குருத்தோலைகளைக் கட்டுவார்கள். கடல் புகும் மீனவர்கள் வெற்றிலைப் பெட்டியாகப் பனையோலை மடக்குப்பெட்டியை இடுப்பில் செருகிக்கொள்வார்கள். தூண்டில் முதலிய சிறு உதிரி உபகரணங்களை இதில் பத்திரப்படுத்துவர். மீன் உலர்த்தல், குழியுப்பிட்டுப் பாடம் செய்தல் எல்லாவற்றிலும் பனையோலைப் பாய்கள் மிகவும் பயன்பட்டது.

வறீதையா கான்ஸ்தந்தின்
vareeth59@gmail.com

Letter to editor. இந்து தமிழ் திசை. 13.10.2018.

No comments:

Post a Comment

விடியலை நோக்கி 2008 நேர்காணல்

  --------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...