Tuesday, 2 October 2018

1000 கடல்மைல். வறீதையா கான்ஸ்தந்தின். கடல்வெளி -தடாகம். 2018.


கடல் அபலையர் கதைகள்.

"கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட கடலோரப் பெண்கள் ஒருங்கிணைவதற்கான சூழலை ஏற்படுத்துவதுதான் இப்போதைய தேவை. தங்கள் சிக்கலுக்கான தீர்வுகளுக்கு அவர்களே இணைந்து குரலெழுப்புவதற்கான வாய்ப்புகளை நாம் உருவாக்கித் தர வேண்டும். 

பேரா. பாத்திமா பாபு
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
#தீபிகா (22, தேவனாம்பட்டினம்):
“எங்க வீட்டுக்காரரு இருக்காருன்னு எந்தத் தடயமும் கெடைக்கல. என் ரெண்டு வயசுப் பொண்ணு தெனமும் ‘அப்பா எங்கே, அப்பா எங்கே’ன்னு கேட்டுட்டேயிருக்கா. அதுலியே நாங்க செத்துப் போறோம். என் வீட்டுக்காரரு காணாமப் போயிட்டாருன்னு சொல்றாங்க. அப்ப, காணாமப் போனவங்களத் தேட முடியாதா?.."

"பிளஸ் டூவுல 950/1200 மார்க் வாங்கினேன். ‘நீ மேல படிச்சு எதுக்கு, ஒழுங்காக் குடும்பம் நடத்துற வழியப் பாரு’ன்னாரு என் வூட்டுக்காரர். நான் மேல படிச்சிருந்தா ஏதாச்சும் ஒரு வேலைக்குப் போயி எங்குழந்தைய வளக்கலாம். இப்ப என்ன பண்றதுன்னு தெரியலங்க.”

#அஞ்சலி (28, தேவனாம்பட்டினம், கடலூர்): “எனக்கு ஸ்கூலுக்குப் போற ரெண்டு பசங்க இருக்காங்க. புயல் வந்து ரெண்டு மாசமாச்சு, என் வீட்டுக்காரர் இருக்காரு, இல்லன்னு இல்லாம ரெண்டுத்துக்கும் பொதுவா என்னங்க சொல்றது?”

#இலஞ்சியம் (தேவனாம்பட்டினம்):
“புள்ளைகளப் பத்திரமாப் பாத்துக்கோன்னு சொல்லி நவம்பர் 25ஆந் தேதி வீட்டவுட்டுக் கௌம்பினவரு திரும்பி வரவேயில்ல. இந்தக் கடல்ல மீனிருந்தா அவரு அங்கி ஏம் போவப்போறாரு? வூட்டவுட்டு எங்கியும் என்ன அனுப்புனதில்ல. இப்ப அவரு இல்லாம நானு என்ன பண்றது? அதிகாரிங்க வாராங்கோ போராங்கோ, ஒண்ணுமே சொல்லமாட்றாங்க. அவரு போயிட்டாரா, இருக்காரான்னு சொல்லவே மாட்றாங்க. இந்தப் பச்சப் புள்ளைகள வெச்சிட்டு செத்துர்லாமான்னு தோணுது.”

#இந்துமதி (58, தேவனாம்பட்டினம்):
“என் பையன் 24 வயசு… கேரளாவுக்குத் தொழிலுக்குப் போனவன்… டிஎன்ஏ டெஸ்ட்டுக்கெல்லாம் போயிருந்தோம். ‘உங்க புள்ள கெடய்க்கல, நீங்க காரியம் பண்ணிக்கிங்க’ன்னு சொன்னாலாச்சும் நாங்க செஞ்சிருவோம்… இந்த ஊர்ல நாங்க என்ன பதில் சொல்றதுன்னே தெரியல்ல! எம் புள்ளதாங்க எனக்குக் கையி. புருசங் குடிகாரம்; குடும்பத்துக்குப் பிரயோசனம் இல்லாதவரு.”

#ஜான்சி (26, தேவனாம்பட்டினம், கடலூர்):
“எனக்கு அப்பா, அம்மா, மாமா, மாமியார் யாருமே இல்ல, எம் புருசந்தாம் எனக்கு எல்லாமே, தெருவுலியே உடமாட்டாரு. எல்லாமே வாங்கிகினு வந்து குடுப்பாரு… இப்ப நாந்தாம் போயாவனும். அப்பா எங்கேம்மான்னு ரெண்டு புள்ளைங்களும் கேக்கறாங்க. என்ன பதில் சொல்றதுன்னு தெரியல. ஆறாம் வகுப்பு படிக்கிறான் ஒரு பையன், இரண்டாங்கிலாஸ் போறா ஒரு பொண்ணு. இந்தப் புள்ளைங்கள நாம் எப்புடிப் படிக்க வைக்கிறது?”

#பிரியா (28, தேவனாம்பட்டினம், கடலூர்):
“நவம்பர் 26இல் கடல்மேலேயிருந்து என் வூட்டுக்காரரு போன் பண்ணினாரு, தொழிலுக்குப் போறேன் பிரியா, பசங்களப் பாத்துக்கோன்னு. அவுரு என்ன எதுக்குமே வெளியே உட்டதேயில்ல… இப்போ எல்லாத்துக்கும் நானே ஆபீசு ஆபிசா அலையிறம். அரசாங்கம் உருப்படியா ஒரு முடிவும் சொல்லல…”
இலஞ்சியம், தேவனாம்பட்டினம்):
“பச்சப் புள்ளைங்களுக்கு பால் வாங்கி டீ போட்டு குடுக்கவே வழியில்ல. ரொம்பக் கஷ்டமா இருந்ததுனாலதாம் வீட்டுக்காரரு கேரளாவுக்குப் போனாரு. ஒரு நாள் போறது ஒரு வருஷம் போற மாதிரியிருக்கு. புள்ளைகளப் பாத்துக்கன்னு சொல்லிட்டுப் போனவருதாம். எனக்கு யாருமே இல்லைங்க. என் வீட்டுக்காரர மட்டும் கண்டு பிடிச்சி குடுத்திட்டாப் போதுங்க. வேற எதுவுமே வேணாம்.”

#தமிழரசி (28 தேவனாம்பட்டினம், கடலூர்):
“கன்னியாகுமரிக்குத் தொழிலுக்குப் போன எம் வூட்டுக்காரரு திரும்பி வரல்ல. புள்ளைங்க படிப்பு செலவு, சாப்பாட்டுச் செலவு ரொம்ப கஷ்டமாயிருக்கு. அரசாங்கம் குடுத்த ஐயாயிரம் ரூபாய வெச்சு எத்தினி நாள் சாப்புடுறதுங்க? யாரும் வரல, என்னாணு கேக்கல. ஒரு முடிவுந்தெரியல…”

#கஸ்தூரி (62, தேவனாம்பட்டினம், கடலூர்):
“சுனாமியில மாட்டி எம்புருஷன் ஐயனாரு படுக்கையில ஆனவருதாம். எம் நாலு புள்ளைங்களையும் மீன் வியாபாரம் செஞ்சு போராடித்தாம் வளத்தேம். எம் பெரிய பசங்க ரெண்டு பேரும் கேரளாவுக்கு தொழிலுக்குப் போனவங்க திரும்பி வரல. எம் புள்ளைங்க மட்டும் எனக்கு திருப்பி கெடச்சுட்டா போதும்க. எப்புடியாவது தேடிக் கண்டுபுடிச்சு குடுத்துருங்க.”

#கங்கா (54, இராசப்பேட்டை, கடலூர்):
“கேரளாவுக்குப் பொழைக்கப் போன என் வூட்டுக்காரரு திரும்பி வரல்ல. புயல் எடுத்ததுக்கப்புறம் அரசாங்கத்திலிருந்து எந்த பதிலும் இல்ல. அணதொணயில்லாம நானும் என் ரெண்டு பெண்பிள்ளைகளும் அழுதுகிட்டுக் கெடக்கிறோம். எங்க வீட்டுக்காரரு புயல்ல போயிட்டாரு. அரசாங்கந்தாம் எங்களுக்கு ஏதாவது செய்யனும்.”
-------------------------------------

 #மங்கையர்க்கரசி (72, தங்கச்சிமடம்):
------------------------------------------------------------
எம் மவன் உசிரோடு இருக்கானோ இல்லியோ தெரியல... 18 வயசில போனது. இப்போ உயிரோட இருந்தா 44 வயசு. அவம் இன்னைக்குத் திரும்ப வந்தாலும் அவனால குடும்பத்துக்கு என்ன செய்ய முடியும்? கெடய்க்க வேண்டிய நேரத்தில நீதி கெடய்க்கலியே!”- மங்கையர்க்கரசி.
------------------------------------------------------------
“எங்க வீட்டுக்காரர் இராமேசுவரத்தில் ஒரு போட்டு வாங்கித் தொழில் செஞ்சிக்கிட்டிருந்தாரு. என் நகையெல்லாம் வித்துதாம் போட்டு போட்டோம். (இலங்கை) நேவி கடல்ல புடிச்சிட்டுப்போன 16 போட்டுல எங்க போட்டு ஒண்ணு. ரெண்டு வருசமா இந்திய அரசாங்கம் முயற்சி பண்ணி, இலங்கைக்காரம் போட்டவுட்டாம். ஆனா பராமரிப்பில்லாம கெடந்ததுனால போட்ட கொண்டுவாரப்ப வழியிலேயே மூழ்கிப்போச்சு. ரெண்டு அரசாங்கமும் எங்களுக்கு எதுவும் செய்யல."

"அப்புறமா என் வீட்டுக்காரரு கூலிக்குப் போயிட்டிருந்தாரு. எலங்கை நேவி சூட்டிங் பண்ணினான். எங்க வீட்டுக்காரரு பொயத்தில குண்டடிபட்டு, அது நுரையீரலுக்கு நேரா எறங்கிடுச்சி. ஒரு புல்லட்டு மட்டும் எடுத்தாக, மத்ததெல்லாம் செதறிடுச்சு. அந்தக் கை பழுதுபட்டு, தூக்க முடியாம ஆயிடுச்சு. ‘இதுனால பின்காலத்துல பாதிப்பு வரும்’னு நரம்பு டாக்டர் அப்பவே சொன்னாரு. எனக்கு ஏழு பிள்ளைங்க – நாலு பொம்பள, மூணு பையங்க. எல்லாம் ரொம்ப சின்னச் சின்னப் புள்ளைங்க. ரொம்பக் கஷ்டப்பட்டு கருவாட்டு வேலையெல்லாம் செஞ்சி மகனுகள வளத்தேன். பத்து வரை அவனுகளப் படிக்க வச்சேன்."

"மூத்த பையன், ‘அம்மா நாலு தங்கச்சிக வூட்ல இரிக்காக, நீங்க கடக்கரையில கஷ்டப்படுறீங்க, அப்பா வேலைக்குப் போயி குடிச்சிட்டு வாராரு. நா ஒழைக்கணும்மா. நா வேலைக்குப் போயி, தங்கச்சிமார நக போட்டுக் கெட்டிக் குடுக்கிரம்’னு கடலுக்குப் போனாம். கடல்ல மடி இழுத்துக்கிட்டிருக்கிறப்ப நாலுபேர் அஞ்சுபேர் போட்ட வளச்சிகிட்டாம். இவுக போட்டையும் ஆட்களை மட்டும் புடிச்சிட்டுப் போயிட்டாம். நாங்க போட்டு வச்சு அங்கங்கே தேடுனம். எங்கெங்கயெல்லாமோ தகவல் குடுத்தோம். கண்டுபுடிச்சித் தாறம்னாங்க, அதுக்குள்ள ராசீவ் காந்தி எறந்துட்டாரு. அதுக்கப்புறம் அடுத்த மகன் தலையெடுத்து கடலுக்குப் போனான்."

"வுடியகாலம் ரெண்டு மணிக்கெல்லாம் வண்டி வரும். கருவாட்டுச் சரக்குகள அமுக்கி நைட்ல கெட்டு கெட்டுவேன். அப்புடியெல்லாம் ராத்திரி பகலா வேல செஞ்சு, பையனும் சம்பாதிச்சு, நாலு பொம்பளப் புள்ளைகளையும் கெட்டிக்குடுத்தேன். எத்தனயோ மந்திரிகள் கிட்ட போய் அழுதிருக்கேன். செஞ்சிலுவைச் சங்கத்தில எல்லாம் மனுகுடுத்து பாத்தேன். எங்குடும்பத்த யாரும் திரும்பிப் பாக்கல… எம் மவன் உசிரோடு இருக்கானோ இல்லியோ தெரியல. 18 வயசில போனது. இப்போ உயிரோட இருந்தா 44 வயசு. அவம் இன்னைக்குத் திரும்ப வந்தாலும் அவனால குடும்பத்துக்கு என்ன செய்ய முடியும்? கெடய்க்க வேண்டிய நேரத்தில நீதி கெடய்க்கலியே!”

#ஆஷியா_பீவி (60, திரேஸ்புரம், தூத்துக்குடி).

----------------------------------------
ஆம்பளப் புள்ள இருக்கோ இல்லியோ, ஒருத்தி விதவை ஆயிட்டாளா, ஒடனே அவளுக்கு விதவை பென்ஷன் குடுத்துரணும். அது அரசாங்கத்தோட கடமை. எங்கள மாதிரி பெண்களத் தெருவுல பிச்சையெடுக்கிற நெலமைக்கித் தள்ளக்கூடாது.
-ஆஷியா பீவி.
-----------------------------------------
ஒக்கிப் பேரிடரின் பின்னணியில் நம்பிக்கையூட்டும் விதமாக அரசு அறிக்கைகளையும் ஆணைகளையும் வெளியிடுகிறது, ஆனால் அவை நடைமுறைக்கு வர அபலைப்பெண்கள் எத்தனை யுகங்கள் காத்திருக்க வேண்டும் என்று தெரியவில்லை.

1987இல் விசைப்படகு மூழ்கி இறந்துபோன ஐந்து சின்னத்துறை மீனவர்களின் விதவைகளுக்கு இன்று வரை இழப்பீடோ பென்ஷனோ கிடைக்கவில்லை. அதில் ஒருவர் 70 வயதைக் கடந்து விட்டார். 2009இல் ஃபியான் புயலில் மூழ்கிய விசைப்படகோடு இறந்துபோன எட்டு தூத்தூர் மீனவர்களின் விதவைகளுக்கு இன்று வரை நிவாரணம் ஏதும் கிடைக்கவில்லை.

26 வருடங்களுக்கு முன்னால் முத்துக்குளிக்கப் போனபோது கடலில் மூழ்கிப்போன பதின்மரில் திரேஸ்புரம் (தூத்துக்குடி) ஆஷியா பீவியின் கணவரும் ஒருவர். எத்தனையோ முறை காத்துக் கிடந்து மீன்வள அதிகாரிகளைப் பார்த்துச் சலித்து விட்டார். விதவை நிவாரணம் கிடைக்கவில்லை. கணவர் இறக்கையில் இளைய மகன் எட்டு வயதுச் சிறுவன். ஆஷியா பீவிக்கு இப்போது வயது 60. ‘உனது மகன் வளர்ந்துவிட்டான், அதனால் உனக்கு விதவை பென்ஷன் கிடைக்காது’ என்று அதிகாரிகள் புதிய காரணம் சொல்கிறார்கள்.

திரேஸ்புரம் கடற்கரைச் சிற்றாலய முற்றத்தில் 42 விதவைப் பெண்களுக்கு மத்தியில் உட்கார்ந்து ஆஷியா பீவி எழுப்பிய குரல் காலத்தின் அறைகூவலாய்ப் பட்டது.
••••••••••••••••••••••••••••••••••••••••
“இந்த 26 வருஷமா என்ன சாப்பிட்டு உயிரோடு இருக்கேன், எப்படி எம்மவன வளத்தேன், மூணு பெண்பிள்ளைகளக் கரசேத்தேன்னு அரசாங்கம் நெனைக்குதாம்? மவன் 20 வயசிலியே ஒரு பொண்ணப் பாத்துக் கட்டிக்கிட்டு மூணு புள்ளயப் பெத்துக்கிட்டாம். அவனும் செத்துட்டாம். அவம் புள்ளியள வளக்கற சொமையும் இப்ப எம்மேலதாம்…”
•••••••••••••••••••••••••••••••••••••••••••
ஆயிஷா பீவி விதவைகளின் சிக்கலை ஒரு முக்கியமான புள்ளியில் நிறுத்துகிறார்:
•••••••••••••••••••••••••••••••••••••••••••
“ஆம்பளப் புள்ள இருக்கோ இல்லியோ, ஒருத்தி விதவை ஆயிட்டாளா, ஒடனே அவளுக்கு விதவை பென்ஷன் குடுத்துரணும். அது அரசாங்கத்தோட கடமை. எங்கள மாதிரி பெண்களத் தெருவுல பிச்சையெடுக்கிற நெலமைக்கித் தள்ளக்கூடாது. எங்களுக்கும் ஒரு வயிறும் மனசும் இருக்குண்ணு அதிகாரிக புரிஞ்சிக்கிறனும்.”
-----------------------
நேர்காணல் (தூத்துக்குடி): வறீதையா, 16.01.2018. உடன்: Fatima Babu, Vinod K Paramiswaran, இசக்கிமுத்து.
#கடல்_அபலையர்_கதைகள்...4.
#மரிய_கொலம்பியா (38, தூத்துக்குடி).
#ஒக்கி... ஒன்பது மாதங்கள்...
•••••••••••••••••••••••••••••••••••••
என் குடும்பம் நிமிர்ந்து நிற்க வேலை வாய்ப்பு வேண்டும். கணவனை இழந்த பெண் துணிந்து நிற்பதற்கு வேலைவாய்ப்புத் தருவதுதான் சரியான உதவி.- மரிய கொலம்பியா.
••••••••••••••••••••••••••••••••••
“கணவனை இழந்த குடும்பம் என்ன நிலையில் இருக்கிறது என்பதை அரசு அதிகாரிகள் உணர்வதேயில்லை. கணவர் இறந்துவிட்டால் ஓரிரு வருடங்களைக் கண்ணீரோடு கழித்தாலும் அடுத்த கட்டத்துக்குத் தாவிப் போய்விடலாம். என் கணவா் காணாமல் போயிருக்கிறார். நான் என்ன முடிவை எடுப்பது? வாழ்க்கையே கேள்விக்குறியாகி விடுகிறது. அடுத்த கட்டம் என்பது எங்களுக்கு இல்லை. என் கணவர் திரும்பி வருவார் என்று நான் நம்புகிறேன். நான் பொட்டும் பூவும் கலர் சேலையும் அணிந்து கொள்கிறேன். ஆனால் சமுதாயம் என்னை எள்ளலோடு பார்க்கிறது, இழிவாகப் பேசுகிறது. எங்களால் இயல்பாக எங்கும் போகமுடியவில்லை. வேலைக்குப் போனால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுகிறோம். இந்தப் பரிதாப நிலைக்கு அரசுதான் காரணம். எங்களுக்கு உரிய காலத்தில் நிவாரணம் தரமாட்டேன் என்கிறது அரசு. என் குடும்பம் நிமிர்ந்து நிற்க வேலை வாய்ப்பு வேண்டும். கணவனை இழந்த பெண் துணிந்து நிற்பதற்கு வேலைவாய்ப்புத் தருவதுதான் சரியான உதவி.”


Monday, 1 October 2018

1000 கடல் மைல் / வறீதையா கான்ஸ்தந்தின்/ தடாகம் -கடல்வெளி/2018. நேர்காணல்கள்



கடல் இன்று பாரம்பரிய மீனவர்களுக்கான களமாக இல்லாமல் கடலோடு தொடர்பற்றவர்களுக்கும் கடலைப் பொருளீட்டும் இடமாக மட்டுமே பார்க்கிற நிறுவனங்களுக்குமான களமாக மாறிக் கொண்டிருக்கிறது. இந்த விபரீத நிலைதான் மீனவர்கள் எதிர்நோக்கும் பெரும் சிக்கல்.

வ.கீதா

SAMAS' KADAL: THE VOICE OF EMPATHY FROM THE PLAIN OF APATHY



Workshop Lecture: 'Our Sea-coasts Through the Eyes
 of Maritime Artisans.'
Fisheries College and Res.
 Instt., TNFU., Ponneri. Sep. 2016.
Book Review:
Samas’ KADAL:
THE VOICE OF EMPATHY FROM THE PLAIN OF APATHY

For the last ten years I have received a multitude of calls with request to find them a story on coastal people for making some TV serial or movie and I was skeptical about their interests. For, I knew what will be its fate at the end of the day. Without exception, everyone was keen on a ‘single story’ that will become a box office hit, and never the ‘complete story’.

கடற்கரையின் குரல் | எம். வேதசகாயகுமார் [கடலம்மா பேசுறங் கண்ணு-அறிமுகம்]


Rs. 150/- KSL Media Ltd.














‘சுனாமிக்குப்’ பின்னரான மறுகட்டுமானத்தின்போது மானுடவியலாளரான அருட்தந்தை ஜெயபதி தொடர் கருத்தரங்குகளை ஒருங்கிணைத்தார். சமவெளி இலக்கிய ஆளுமைகளையும் கடலோர இளைஞர்களையும் கலந்துரையாடத் தூண்டினார். கடலோர இளைஞர்கள் வெளிப்படுத்திய சீற்றம் என்னைக் கவர்ந்தது. தொடர் புறக்கணிப்புகளின் விளைவு அது. பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தினை அங்குதான் சந்தித்தேன்.

The Sea Tribes under Siege / Vareethiah Konstantine / mainSpring- KadalveLi/ 2017. FOREWORD/ S.VINCENT

KADALVELI
FOREWORD
Prof.S.Vincent.

The young boy defies his mother’s warning and plays in the incoming waves of the sea. He shrieks with joy and fear and rushes back when the waves touch his feet. His younger sister watches his brother but does not dare go near the sea. Such is our exposure to the sea. Our experience with the fury of the sea is limited to such occasional visits to the beach or to the rare thrilling rides to the Thiruvalluvar statue at Kanyakumari in small boats. We live in awe of the mighty ocean reading news items occasionally about the disasters of sinking of boats in the sea and adventurous young men getting drowned while bathing in the rough beach of Rameswaram. Only after the devastation caused by Tsunami most of us realized how strong and furious the sea could become. We are equally ignorant about the perils the fishermen encounter or about the life of the men and women who are engaged in the fishing industry. To fill this void a few writers are bringing to the people living inland the short and simple annals of the poor fishermen. One of the foremost among them is Vareethiah Konstantine.

1000 கடல் மைல் [கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்] / வறீதையா கான்ஸ்தந்தின். கடல்வெளி- தடாகம் / 2018


குல்ள்

நாளை நாங்கடலுக்குப் போயி சம்பாதிச்சிட்டு வருவேன், நீ இண்ணைக்குக் கடன் வாங்கிக் காரியங்களைப் பாரு'ன்னு சொல்ல, ஒரு மாப்பிள இப்ப இல்ல.

-மேரிபுஷ்பம்.

***
கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட கடலோரப் பெண்கள் ஒருங்கிணைவதற்கான சூழலை ஏற்படுத்துவதுதான் இப்போதைய தேவை

-பாத்திமா பாபு.

1000கடல்மைல் [கடல் பழங்குடிகளும் ஒக்கிப் பேரிடரும்] வறீதையா கான்ஸ்தந்தின் [ முகவுரை/ மாலதி மைத்ரி]

நவீன பொருளாதாரக் கொள்கையும் நவீன மீன்பிடிமுறையும் மீனவப் பெண்களை மீன்வள பொருளாதாரத்திலிருந்து அந்நியமாக்கி கடல் மரணங்கள்கடல் படுகொலைகளில் தங்கள் ஆண்களைப் பலிகொடுத்துவிட்டு அரசுகளிடம் கையேந்தவிட்ட அரசியலையும் அரசுகள் இம்மக்களை பழிவாங்கும் சதிகளையும் வறீதையா பேசுகிறார். சமவெளி மக்களின்அதிகார வர்க்கத்தின் மனசாட்சியை 1000கடல்மைல் தொட முயற்சிக்கிறது.

மாலதி மைத்ரி

THE SEA AND THE COAST / V.GEETHA. A REVIEW ON THE WRITINGS OF D CRUZ AND KONSTANTINE. 2015.



Konstantine is no Luddite. He makes it clear that traditional fishers, like his own father, lived for the most part in penury and hunger – and in thrall to the Church at least in southern Tamil Nadu... His dilemma is that fishers are being steadily alienated from a world that has defined their historical existence – and their very humanity – and they are powerless to affect the turn of events. Anchoring fisher claims to a dignified, sustainable existence in the ways that they have evolved over the centuries, he makes a passionate plea to recognize their distinctive conditions of existence.

THE INNER CHILD AT PLAY. Introduction to Kumarananthan’s ‘The Pale Twilight

Kumarananthan has chosen to take the road less traveled, unveiling new vistas, addressing the margins within the margins, namely the social deviants, and the issues thereof... It’s time the world stood up and spoke for them. What else could initiate such a monumental mission than literature?

Thursday, 27 September 2018

SOLAS AND ARTISANAL FISHERMEN: LESSONS FROM OCKHI




Mass casualties in the deep sea due to Cyclone Ockhi 2017 expose the fatal inadequacy ofour Early Warning System, colossal failure in Search and Rescue operations and lacunae in on board safety protocols in mechanised fishing vessels. What is the take home lesson?


------ --------- -------- ----------------


SOLAS AND ARTISANAL FISHERMEN: LESSONS FROMOCKHI
Dr. K. Vareethiah.
Email:vareeth59@gmail.com| BlogSpot: Vareethiah.com | Fb: VareethiahKonstantine

Saturday, 18 August 2018

ஒக்கிப் பேரிடர் குறித்து ஆவணப்படம்


(ஒக்கிப் பேரிடர் குறித்து ஆவணப்படம் எடுத்துவருகிறார் பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின். மனிதி அமைப்பைச் சேர்ந்த செல்வி என்பவர் அந்த ஆவணப்படத்தில் தன் கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். அதன் சுருக்கமான தொகுப்பு இது)

Wednesday, 1 August 2018

ஒக்கி விதவையரின் கண்ணீர் துடைப்போம்! (இந்து தமிழ் திசையில் வெளியான நடுப்பக்க கட்டுரை)

மரணம் நெய்தல் நிலத்துக்குப் புதிதல்ல. மரணமும் நிச்சயமின்மையும் கடல் வாழ்வின் விலக்க முடியாத கூறுகள். பேரிடர்களும் உயிர் அபாயமும் அங்கு இயல்பானவைதாம். ஆனால், கடலில் நிகழும் ஒரு மரணம், வாழ்வாதாரத்துக்காக அவரை மட்டுமே நம்பியிருக்கும் குடும்பத்தைச் சீர்குலைத்துவிடுகிறது.

Friday, 20 July 2018

தமிழ்நாட்டு மீன்கள் தமிழ்நாட்டிலேயே கிடைத்தால் பிரச்சினையே இல்லை ( தமிழ் இந்து திசையில் வெளியான நடுபக்க கட்டுரை)


2004 சுனாமியைத் தொடர்ந்து கடல் மீனுணவு குறித்த பெரும் புரளி ஒன்று கட்டவிழ்த்து விடப்பட்டது: ‘மனிதச் சடலங்களைத் தின்ற கடல் மீன்களை வாங்கி உண்ணாதீர்’. மீண்டும் மக்கள் இயல்பான மீனுணவுக்குத் திரும்புவதற்கு ஊடகங்களில் சில கடலறிவியல் அறிஞர்களைப் பேசவைக்க வேண்டியிருந்தது.

Monday, 8 January 2018

கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்



ஒக்கி புயல் என்பது கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர் என்கிறார் பேராசிரியரும் எழுத்தாளருமான வறீதையா கான்ஸ்தந்தின்; பெண்களின் கண்கள் வழியாக ஏன் இந்தப் பேரிடரைப் பார்க்க வேண்டும் என்பதை விவரிக்கிறார் வறீதையா கான்ஸ்தந்தின்.

Thursday, 28 December 2017

பேரிடர்: அபலைகளின் துயரம்!


ஒக்கி புயலில் காணாமல்போன, கரைசேராத 500-க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு அரசை வலியுறுத்தக் கோரி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த மனுவுக்குப் பதில் தர வேண்டும் என்று நீதிமன்றம் அரசைக் கேட்டிருக்கிறது. காணாமல்போன மீனவர்கள் பற்றி, அரசு பதில் சொல்லியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம், காலம்காலமாக மீனவர்கள் அனுபவித்துவரும் சிக்கலுக்குத் தீர்வாக அமையுமா?

Friday, 8 December 2017

‘பியான்’ முதல் ‘ஒக்கி’ வரை- பேரிடர்களிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோமா? (இந்து தமிழ் திசை நடுப்பக்க கட்டுரை)


'ஒக்கி’ புயல் பாதிப்புகளைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சுற்றிக்கொண்டிருக்கும் மதுரையைச் சேர்ந்த தொலைக்காட்சிச் செய்தியாளர் ஒருவரைச் சந்தித்தேன். “இந்த ஐந்து நாள் பயண அனுபவத்தில் நீங்கள் என்ன புரிந்துகொண்டீர்கள்?” என்று கேட்டேன். “குமரி மாவட்டத்திலேயே கடுமை யான பாதிப்பு வடக்குப் பகுதிகளில்தான். ரப்பர் தோட்டங்கள் எல்லாம் மொத்தமாகச் சேதமடைந்துவிட்டன. மின்கம்பங்களெல்லாம் ஒடிந்து தொங்குகின்றன. 20 நாட்கள் ஆனாலும் மின்சாரம் வராது. ஆனால், எல்லோரும் நாகர்கோவிலைப் பார்த்துவிட்டுப் போய்விடுகிறாரக்ள்” என்றார் அவர்.

Saturday, 11 November 2017

கடல்புரத்தில் காத்திரமான ஓர் உரையாடல்














மிழ் இலக்கணம் திணை மரபு பற்றிக் கூறும்போது நெய்தல் திணையை ‘கடலும் கடல் சார்ந்த இடமும்’ என்று விளக்குகிறது. கடலைத் தொழிலுக்கான இடமாகவும், கடற்கரையை வாழ்வதற்கான இடமாகவும் கொண்ட இப்பகுதி மக்கள் ‘பரதவர்’ என்பதிலிருந்து தொடங்கி, பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றனர். தமிழர்களின் வரலாறு பற்றிப் பேசும்போது ‘கடல்கொண்ட கபாடபுரம்’ தொன்மத்தில் தொடங்கி, ‘திரைகடலோடி திரவியம் தேடு’ என்ற பழமொழிகள் வரை எண்ணற்ற சான்றுகள் பரதவர் எனும் கடலோரப் பகுதி மக்களின் வரலாற்றை நமக்குத் தெரிவிக்கின்றன. எனினும் நமக்குக் கிடைத்த இந்த அறிவும்கூட மேலோட்டமானதுதான் என்பதை நமக்கு உணர்த்துவதாய் வந்துள்ள கட்டுரைத் தொகுப்பு நூல்தான் ‘வேளம்’ (உரையாடல்).

Saturday, 16 September 2017

கடலம்மா பேசறங் கண்ணு 20: சமூக மாற்றத்தின் உயிர்நாடி


திருவனந்தபுரத்தில் சங்குமுகம் அருகே கண்ணாந்துறை என்னும் கடலோர கிராமத்தில் ஒரு சராசரி மீனவன். அவன் கடலுக்குப் போய்ச் சம்பாதிப்பதில் முக்காற்பங்கு குடி, வம்பு, வழக்கு, கைது, ஜெயில் எனக் கரைந்துவிடுகிறது. வீட்டில் கதியற்ற மனைவியுடன் பத்துப் பிள்ளைகள். தந்தை இறந்துவிட வேண்டுமெனக் குடும்பமே பிரார்த்திக்கிறது. குடும்பத்தின் இராப்பட்டினியைப் போக்க மார்க்கம் வேறின்றி அம்மா தலைச்சுமையாக மீன் விற்கும் தொழிலைத் தேர்ந்துகொள்கிறார்.

Saturday, 9 September 2017

கடலம்மா பேசுறங் கண்ணு 19: ரௌத்ரம் பழகிய கோம்பை

உயிர் இயங்குவதற்கு சக்தி தேவை. வேதிம சக்தியை வெப்ப சக்தியாக்கி, பிறகு அதை உழைப்புச் சக்தியாக விநியோகிப்பதுதான் வளர்சிதைமாற்றம் என்கிறது உயிரியல். வெப்பம்தான் உயிரியக்கத்தின் மூல ஆதாரம். வெப்பத்தை இழந்துவிட்டால் உடல் வெறும் சடம். வெப்பம் மிதமிஞ்சிப் போனால் பஸ்மாசுரனுக்கு நேர்ந்த முடிவுதான் எல்லா உயிருக்கும் நேரிடும். உயிரினங்கள் எவ்வாறு இச்சக்தியைப் பெற்றுக் கொள்கின்றன என்பது இயற்கை நிகழ்த்தும் அற்புதம்.

Saturday, 2 September 2017

கடலம்மா பேசுறங் கண்ணு 18: ஈடுகட்ட முடியாத தியாகம்


“அப்பா, இந்தக் கட்டுமரத்தைக் கடலுக்குள்ளே எப்படிக் கொண்டு போவாங்க? மீன் லேலம் போடுறதுண்ணா என்னப்பா? இந்த மீனையெல்லாம் எதுக்குப்பா மண்ணில வாரி வீசியிருக்காங்க? கடலில் மிதந்துகிட்டிருக்கிற கட்டுமரத்தில எப்படிப்பா அவங்க எந்திரிச்சு நிக்கிறாங்க? கடல்ல தாகம் எடுத்தால் எங்கே போவாங்க?...”

Saturday, 26 August 2017

கடலம்மா பேசுறங் கண்ணு 17: என்னோடு போகட்டும்


"கடந்து வந்த பாதையைப் பார்த்தால் பிரம்மிப்பு அடங்கவில்லை இன்னும். எப்படி நடந்தது இது? என் அப்பா அதிகம் பேசமாட்டார். உலக ஞானமோ, வாய்ச்சவடாலோ, நிலபுலன்களோ, துணை வருவாயோ எதுவும் இல்லாமல் வாழ்க்கையைத் தள்ளிக்கொண்டிருந்த அந்த சாதாரண மனிதருக்குள், இப்படியொரு பெரிய கனவு கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்திருக்கிறது. ‘எப்பாடு பட்டாவது என் மக்களை படிக்கவைத்து ஆளாக்குவேன். கடலில் படுகிற கஷ்டங்களெல்லாம் என்னோடு போகட்டும்’ என்பது அவரது மந்திரமாக இருந்தது.

Saturday, 19 August 2017

கடலம்மா பேசுறங் கண்ணு 16: கரைதிரும்பும் கட்டுச்சோறு


கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு விளிம்பில் அரபிக் கடலோரத்தில் இருக்கிறது எங்கள் குடியிருப்பு. கத்தோலிக்க மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர்கள் எங்கள் மூதாதையர். தூண்டில் மீன்பிடித் தொழிலுக்கு ஒத்தனா மரத்தில் (ஒருவர் தனியாக மீன்பிடிக்கச் செல்லும் கட்டுமரம்) கடலுக்குள் போகும் அப்பா வெகுதொலைவுக்குப் பாய்விரித்துப் பயணித்து நாள் முழுவதும் தூண்டில் போட்டுக் காத்திருப்பார். ஒரு மச்சமும் சிக்காது. ‘பவிச்சு வயது ஒட்டிக் கரையில என் மக்க என்னைக் காத்து நிக்குமே கடவுளே! நான் வெறும் மரத்தோடவா கரைக்குப் போகணும்? ஒரு மச்சம் என் தூண்டிலில் சிக்கவிடும் கடவுளே!’ என்று உருகி ஜெபம் செய்துகொண்டே இரவும் பகலும் தூண்டில் வீசுவார்.

Saturday, 12 August 2017

கடலம்மா பேசுறங் கண்ணு 15: பசி, சாகசம், மரணம்!

கடல் தங்கல் பயணத்துக்காக எடுத்துச் செல்லும் கட்டுச்சோற்றுக் கவளங்கள் மூன்று நாட்கள் தாங்கும். அதனுடன் சிறு பனையோலைக் கடகத்தில் வேகவைத்த உணக்கக் கிழங்கை (சீவி உலர்த்திய மரவள்ளிக் கிழங்கு) எடுத்துச் செல்வார்கள். பசி போக்கவும் விழித்திருக்கவும் அருமையான நொறுக்குத் தீனி இது.

Tuesday, 8 August 2017

காலத்தை வென்ற கட்டுமரங்கள் கடல் ஓசை வானொலியில் ஆற்றிய உரை

கடல் ஓசை 90.4 சமுதாய வானொலியில் காலத்தை வென்ற கட்டுமரங்கள் குறித்து பேரா. வறீதையா கான்ஸ்தந்தின் உரையை கேட்கலாம்.

Saturday, 5 August 2017

கடலம்மா பேசுறங் கண்ணு 14: சாகசக் கடல்வீரன்!


மண் சார்ந்த சமூகங்களில் ஊக்கம் மிகுந்த தொழிலாளிகளுக்கு எப்போதுமே மதிப்புதான். ‘பெண்டாட்டி பிள்ளைகளுக்குக் கஞ்சி ஊற்ற’த் தகுதியான இளைஞனுக்குப் பெண் கொடுக்க எல்லோரும் முன்வருவார்கள். சல்லிக்கட்டில் ஏறுதழுவும் வீரம் ஆணின் அடையாளம். மருதத் திணையில் இது யதார்த்தம்.

Saturday, 29 July 2017

கடலம்மா பேசுறங் கண்ணு 13: காலத்தை வென்ற கட்டுமரம்


கட்டுமரம் என்னும் பாரம்பரிய மரக்கலம், தமிழ்நாட்டின் மீன்பிடி மண்டலங்களுக்குத் தக்கவாறு பெற்றுள்ள வடிவ மாற்றங்கள் அபாரமானவை. அரபிக் கடலின் சீற்றம் மிகுந்த கடற்பரப்பை எதிர்கொள்ள ஒடுகலான வடிவம்; முத்துக்குளித்துறையின் தென்பகுதியில் ஆழிக்கடலைச் சமாளிக்க பரந்த- கனமான வடிவம்; சோழமண்டலக் கடற்கரையின் (வட தமிழ்நாடு) மாரியா வீச்சைச் சமாளிக்க அணியம் வளைந்து மேல்நோக்கிக் கூம்பிய ‘ஆந்திரா வடிவம்’.

Saturday, 22 July 2017

கடலம்மா பேசறங் கண்ணு 12: மூழ்கவே மூழ்காத படகு


அலையைக் கடத்தல் என்னும் பழங்குடி சாகசம், எனக்குள் அச்சத்தையும் பரவசத்தையும் ஒருசேரத் தூண்டும் ஒன்று. கன்னியாகுமரி மாவட்டத்தின மேற்குக் கடற்கரை பொதுவாக ஆழமும் அலைச்சீற்றமும் இணைந்த கடல் பகுதி. ஆனி - ஆடி மாதங்களில் நான்கைந்து மரம்பிடி- சாகச வீரர்கள் விடியலில் ஒரு கட்டுமரத்தைக் கடலுக்குள் செலுத்தப் போராடும் காட்சி இங்கே வழக்கமாக இருந்தது. ஒவ்வொரு முறையும் பனைபோல் எழும் அலையிடம் தோற்றுக் கரைக்குக் கட்டுமரம் அடித்துவரப்படும். இப்படியாக, நீரோட்டத்தின் போக்கில் ஓரிரு கிலோமீட்டர் தொலைவுக்கு கரைநெடுகக் கட்டுமரத்தை கரைநீரோட்டம் இழுத்துச் சென்றுவிடும்.

Saturday, 15 July 2017

கடலம்மா பேசறங் கண்ணு 11: விரல் நுனியில் இருக்கும் கண்


வெள்ளக்காடாக விரிந்துகிடக்கும் உப்புநீர்ப் பெருவெளி. உட்கடலுக்குள் போய்விட்டீர்கள் என்றால் இதுதான் உங்கள் காட்சி அனுபவம். ஆனால் ஒரு கடலோடியைப் பொறுத்தவரை அப்படியல்ல. கடல் பெருவெளியிலும் ஊர்கள் இருக்கின்றன. கோயில், குளம், தெருக்கள், கட்டிடங்கள், சாலைச் சந்திப்புகள் என நில எல்லைகளை நாம் நினைவில் வைத்திருப்பதுபோல, தான் புழங்கும் கடல் கடலோடிக்கு அத்துப்படி.

Saturday, 8 July 2017

கடலம்மா பேசறங் கண்ணு 10: ஜி.பி.எஸ். பிதாமகன் யார்?


கடலோடிகளின் இடம் கணிக்கும் உத்திக்கு முத்தாய்ப்பாக நிற்பது தாழ்த்துவலை என்னும் பழந்தொழில்நுட்பம். தனி அடையாளம் ஏதுமற்ற கடல் பெருவெளி நீர்ப்பரப்பில், வலையை விரித்துவிட்டு (அமிழ்த்தி வைத்தல்) கரை திரும்பிவிடுவது; ஓரிரு நாட்களுக்குப் பிறகு கடலுக்குள்ளே வலை விரித்த இடத்துக்குச் சென்று குறிப்பிட்ட இடத்தில் துல்லியமாக நங்கூரமிட்டு வலையை இழுத்து மீன்களைக் கழித்துவிட்டு, வலையை மீண்டும் கடலில் அமிழ்த்திவைத்துவிட்டு அறுவடை மீனுடன் கரை திரும்புவது. தூண்டில் மீன்பிடித் தொழிலிலும் மீன் அறுவடைக்களங்களைக் குறிப்புணர்ந்து கணித்துப் போடுவது உண்டு. இதெல்லாம் எப்படிச் சாத்தியமாகிறது?

Saturday, 1 July 2017

கடலம்மா பேசறங் கண்ணு 9: மச்சம் பிடித்தவனுக்கு மிச்சம் இல்லை

பஞ்ச கால உணவு, மீனவர் உணவைப் பற்றிப் பேசுகையில் ஆமை முட்டை பற்றியும் பேச வேண்டும். கோடைக் காலத்தில் அலைவாய்க்கரை மணல் தேரிகளில் ஆமைகள் இட்டுச் செல்லும் முட்டைகளைச் சேகரித்து வீட்டுக்குக் கொண்டுவருவோம். கோழி முட்டை போலன்றி ஆமை முட்டை சவ்வு போன்ற உறையால் அமைந்தது. முழுமையாக வேகவைத்த முட்டை சுவைமிகுந்த புரத உணவு. பச்சையாகவும் குடிக்கலாம்.

Saturday, 24 June 2017

கடலம்மா பேசறங் கண்ணு 8: மனதைவிட்டு அகலாத சுவை!


பஞ்ச காலத்தில் கத்தோலிக்க நிவாரண சேவை என்ற பெயரில் அமெரிக்காவிலிருந்து உணவு தானிய, பால் மாவு, எண்ணெய்ப் பொருட்கள் வருவதுண்டு. ஒரு கத்தோலிக்க மறை மாவட்டத்தின் தலைமையிடத்தில் இவற்றை இருப்புவைக்கச் சேமிப்புக் கிடங்குகளை அமைத்திருப்பார்கள். தாய்-சேய் நலத் திட்டம், வேலைக்கு உணவுத் திட்டம், பள்ளிகளில் நண்பகல் உணவுத் திட்டம் என்பதாகப் பல பெயர்களில் அவை கடற்கரைக்கும் வரும்.

Saturday, 17 June 2017

கடலம்மா பேசறங் கண்ணு 7: பஞ்ச கால ஞாபகங்கள்


சமூக வரலாற்றில் பெரும் பஞ்சங்கள் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. காரணங்கள் ஒன்றிரண்டல்ல. பஞ்சம் ஒரு வரலாற்றுப் படிப்பினை. சமூகத்தின் ஆகச் சிறந்த மீளும் பண்புகளும் ஈனமான சுரண்டல் – அடக்குமுறைப் பண்புகளும் வெளிப்படும் காலமும் அதுதான். பஞ்சத்தைத் தொடர்ந்து மக்களின் உணவுமுறையில் பெரும் திருப்பம் நிகழ்வதும் உண்டு.

Saturday, 10 June 2017

கடலம்மா பேசறங் கண்ணு 6: குளுவர!


குளுவர - தென்மேற்குப் பருவகாலம் தென்னெல்லைக் கடற்கரைக்குத் தருகிற அனுபவத்தை என் சிறு பருவ நினைவுகளிலிருந்து அகழ்ந்தெடுக்க முயல்கையில், இந்தச் சொல்தான் அலைமோதுகிறது.

Saturday, 3 June 2017

கடலம்மா பேசுறங் கண்ணு 05: இயற்கையோடு ஓர் உடன்படிக்கை


நிலாச் சோறூட்டிப் பிஞ்சுகளை உறங்க வைக்கும் நம் பாட்டிமார் சொல்லும் தேவதைக் கதைகளை நினைவுபடுத்துவதாக விரிகிறது கடல் பழங்குடிகளின் வாழ்க்கை. எளிமையும் சுதந்திரமும் மகிழ்ச்சியுமே ததும்பி நின்ற அந்த வாழ்க்கை, மீண்டும் கைகூடி வராதா என்னும் ஏக்கம் என் மேல் கவிகிறது.

Saturday, 27 May 2017

கடலம்மா பேசுறங் கண்ணு 04: பழங்குடியின் பெருங்குரல்


மடிவலைக் காலம், கரைமடிவலைக் காலம் ஒட்டுமொத்த மீனவக் கிராமத்துக்கும் கொண்டாட்டக் காலம். எல்லா வீடுகளிலும் தாராளமாய் மீன் சமையல் இருக்கும். அந்த வகையில், `வேளா ஏறப்பிடிப்பு’ கன்னியாகுமரிக் கடற்கரையில் பெரும் கொண்டாட்டம்தான். மடி தாங்காத வேளா மீன்பாடு!

Saturday, 20 May 2017

கடலம்மா பேசுறங் கண்ணு 03: சீறும் கடலும் திமிறும் கடலோடியும்


`இவங்க ஏன் இப்படி இருக்காங்க!’
சுனாமியைத் தொடர்ந்து சமவெளி மக்கள் கடலோடிகளைக் குறித்துத் திரும்பத் திரும்ப அதிர்ச்சியுடன் எழுப்பிய கேள்வி இதுதான்.
ஒரு கடலோடியை இயக்குவது எது? சந்தேகமின்றி, கடல்தான். அச்சு அசலாக, அவன் கடலின் வார்ப்பு. அவனுக்குள் கடல் இயங்கிக்கொண்டிருக்கிறது.

Saturday, 13 May 2017

கடலம்மா பேசுறங் கண்ணு 02: பேரிழப்பு தந்தது என்ன?


அக்டோபர் 26, 2012. அது எங்கள் குடும்பத்துக்குத் துயரம் தோய்ந்த நாள். என் மைத்துனரின் மகன் லெராய், கோயம்புத்தூர் அரசுக் கல்லூரியில் இறுதியாண்டு பொறியியல் படித்துவந்தான். தனது பள்ளிக்கால நண்பர்கள் மூன்று பேருடன் இறச்சகுளம் பகுதிக்கு அவன் இயற்கைச் சுற்றுலா சென்றிருந்தான். ஒரு நண்பனின் வீட்டருகே ஆற்றில் மூழ்கி நால்வரும் இறந்துபோயினர். நான்கில் இரண்டு சடலங்கள் கைகோத்த நிலையில் நிகழ்விடத்துக்கு 100 மீட்டர் கீழே மூழ்கியெடுக்கப்பட்டன. இவனும் அதில் ஒருவன்.

Saturday, 6 May 2017

கடலம்மா பேசுறங் கண்ணு 01: முன்னோர்களின் கால்களைத் தழுவிய அதே நீர்

தொடுவானம் கதிரவனைச் சிவப்பினால் போர்த்த முயலும் அந்திவேளை. அலைவாய்க்கரையில் நின்றவாறு கடலின் பரப்பை நீங்கள் வியந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்தக் கணத்தில் தண்ணென்ற குளிர்ச்சியுடன் உங்கள் பாதங்களைத் தழுவி மீளும் கடல்நீர்,…ஒரு கட்டத்தில் துருவப் பனிமலைகளின் ஏதோவொரு பனிப்பாளத்தின் ஒரு பகுதியாக இருந்தது; பெருங்கடல் நீரோட்டங்களாய் உலகளாவிய பயணத்தில் இருந்தது; பஞ்சுப் பொதிகளென நீராவி வடிவத்தில் மேகமாக மாறி, வான்முகட்டைத் தழுவியலைந்தது; மலைமுகடுகளில் கனிந்து மழையாய்ப் பொழிந்தது; சுனை, சிற்றோடை, சிற்றாறு, பேராறு எனப் பெருகி, திணைதோறும் பலவகை நிலப்பரப்புகளைத் தழுவியணைத்து, தங்கி நின்று, கழிவெளிகளில் கலந்தது; மீண்டும் தாய்வீடு சேர்ந்தது.

Sunday, 19 February 2017

எண்ணூர் முதல் இனயம் வரை: காயப்பட்ட கடற்கரை


சென்னை மெரினா கடற்கரை இன்று புதிய அடையாளம் பெற்றுவிட்டது. ‘தை எழுச்சி’க்கு இரண்டு அடையாளங்கள் உண்டு. ஃப்ளோரிடாவுக்கு அடுத்தபடியாக உலகின் நீளமான கடற்கரை மணல்வெளி. கி.பி. 1908-ல் இன்றைய சென்னை துறைமுகத்துக்கு முன்னோடியாகக் கடல் பாலம் நிறுவப்பட்டது முதல் கரைக்கடல் நீரோட்டங்களின் போக்கில் ஏற்பட்ட மணல் குவிவால் உருவானதுதான் மெரினா. 1978-ல் இயங்கத் தொடங்கியது விழிஞம் மீன்பிடித் துறைமுகம். அதற்குத் தென்கிழக்காக ஐந்து கி.மீ. நீளத்துக்கு ஒன்றரை கி.மீ. அகலத்தில் புதிய நிலமும் மணல்வெளியும் உருவாயிற்று. பாண்டியரின் துறைமுக நகரமாக விளங்கிய கொற்கை, இன்று கடல் விளிம்பிலிருந்து ஐந்து கி.மீ. விலகியிருக்க, கடல் பின்வாங்கி விட்டது.

Wednesday, 13 May 2015

பழவேற்காடு முதல் நீரோடி வரை ஜு.வி.நூலகத்தில் வெளிவந்த புத்தக அறிமுகம்

‘‘என் விடலைப் பருவம் மீனவக் கிராமத்தின் வாசனை அடுக்குகளாக மனதில் பதிந்து கிடக்கிறது. மறக்க இயலாத அருமையான வாழ்க்கை அது.

Sunday, 18 January 2015

கடலோர வனங்கள் எங்கே?

இயற்கை என்பது நுட்பமான சங்கிலி, எங்கே அறுபட்டாலும் பெரும் பிரச்சினைதான்.
தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாகவும் எதிர்கால மாகவும் அமைபவை திணை நிலமும் மொழியும்தாம். திணை நிலம் அதன் நீர் பெறுமதியால் அமைவது. தமிழகத்தின் கிழக்கு நோக்கிப் பாயும் ஆறுகளின் வடிநிலங்கள் நெய்தல் நன்னீராதாரங்களில் சங்கமிக்கின்றன. வடக்கே பாலாறு தொடங்கி தெற்கே குழித்துறையாறு வரை அத்தனை ஆறுகளும் கடலோடு கலந்து, கரைக்கடலில் மீன்வள உற்பத்திக்குப் பங்களிக்கின்றன. கடலில் கலப்பதற்கு முன்பாக, இந்த ஆறுகள் நெய்தல் நீராதாரங்களைச் செழுமைப்படுத்துகின்றன. முன்பு, இந்த நிலப்பரப்புகளில் காயல்கள், கழிமுகங்கள், கண்மாய்கள் இயல்பாக இணைக்கப்பட்டிருந்தன. நம்முடைய முன்னோர்கள் பயிரிடுவதற்காக அணை களை நம்பியிருக்கவில்லை. கண்மாய் சார்ந்த விவசாயம்தான் அன்று தமிழ் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்துவந்தது.

விடியலை நோக்கி 2008 நேர்காணல்

  --------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...