ஹிபகுஷாக்கள் உலகுக்குச் சொல்லும் செய்தி என்ன?
எது வந்தாலும் வாழ்க்கையை நம்பிக்கையுடன் முன்நகர்த்திப் போவதுதான் மனிதனுக்கு அழகு;
பிறருக்குப் பயன்பட வாழ்வதே வாழ்வுக்கு அர்த்தம் தருவது;
எத்தனைப் பெரிய வளர்ச்சியைத் தரும் என்றாலும் அணுவாற்றல் மனித உயிர்களுக்கு ஈடாகாது;
ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு தாக்குதல்களில் சில மாதங்களிலிருந்து ஐந்தாண்டு காலத்துக்கு உள்ளாக இறந்துபோன மூன்று இலட்சம் மனிதர்களின் அவலங்கள் முடிந்துபோன அத்தியாயம் என்றால் அந்தத் தாக்குதல்களின் பேரவலமாய்த் தொடரும் நீண்ட அத்தியாயம் வேறொன்று உண்டு- அணுகுண்டு வீச்சில் தப்பிப் பிழைத்த மனிதர்கள். இவர்களை 'ஹிபாகுஷா' (Hibakusha) என்று அழைக்கிறார்கள். இந்த ஜப்பானியச் சொல் உலக அளவில் ஏற்கப்பட்டிருக்கிறது. இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு அமெரிக்காவில் அறுவை சிகிட்சை அளிக்கப்பட 25 இளம்பெண்கள் உட்பட முக்கியமான ஹிபகுஷாக்கள் குறித்த பதிவுகள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன. அவர்களில் ஒரு குழுவினர் அணுவாயுத எதிர்ப்புச் செயல்பாட்டாளர்கள், ஹிபகுஷாக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பவர்கள், ஹிபகுஷா நோயாளிகளுக்குத் தனிச்சிகிட்சை அளிக்கும் மருத்துவர்கள், பல்துறைச் சாதனையாளர்கள்... வேதியியலுக்கான 2008 நோபல் பரிசுப் பேற்றாளர் ஒசாமு ஷிமோரா ஒரு ஹிபகுஷா. ஹிபகுஷாக்களை மனிதமனவுறுதியின் வாழும் வகைமாதிரியாய்க் கொள்ளலாம். அணுகுண்டுகள் வீசப்பட்டபோது ஆறு கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பாலிருந்தவர்கள் அதிர்வு, வெப்பம், கதிரியக்கத்தால் பாதிக்கப்பட்டனர். ஹிரோஷிமா அணுகுண்டு வெடிப்பின் அதிர்வு 18.5 கிலோமீட்டர் வரை பரவியது.
ஹிபகுஷாக்கள் உலகுக்குச் சொல்லும் செய்தி என்ன? எது வந்தாலும் வாழ்க்கையை நம்பிக்கையுடன் முன்நகர்த்திப் போவதுதான் மனிதனுக்கு அழகு; பிறருக்குப் பயன்பட வாழ்வதே வாழ்வுக்கு அர்த்தம் தருவது; எத்தனைப் பெரிய வளர்ச்சியைத் தரும் என்றாலும் அணுவாற்றல் மனித உயிர்களுக்கு ஈடாகாது; இயற்கையின்மீது அணுவியல் வன்முறை நிகழ்த்த மனிதனுக்கு உரிமையில்லை.
==========================================
விரைவில் வெளிவரவிருக்கும் ’திணைவெளி: நிலம், சூழலியல், பண்பாடு’ என்னும் எனது நூலிலிருந்து சில பகுதிகள்....
============================================
No comments:
Post a Comment