Friday, 22 February 2019

வேதாரண்யமும் தஞ்சை டெல்டாவும் (கஜாப் புயல் - மீள்சந்திப்பு) | PART I


"புயல் வருகிறது என்று எச்சரிக்கை செய்தீர்கள், இந்த சொத்தையெல்லாம் தூக்கிக்கொண்டு ஓட முடியுமா? வெறும் எச்சரிக்கை மட்டுமே எங்கள் பிரச்சினைகளைத் தீர்ந்துவிடுமா? புயலுக்குப் பிறகு எங்கள் வாழ்க்கைக்கு உத்தரவாதம் தருவது யார் பொறுப்பு?"

Wednesday, 20 February 2019

TOP SLIP- EVERGREEN MEMORIES | With TN Green Artists. Part II

Two day Green Meet. September 2016. Participants:Dr. Jeevanandham (Erode), Prof KVKrishnamoorthi, Kaadodi Nakkeeran, Pamayan, Sadhasivam, Avainaayagan, Adv. T.MurugaveL, Prof MurgaveL, Aasaithambi, Valliappan, Veyyil MuthuperumaL, N.Vinoth, G.Karuppaiah, Mohamed Riyaz, KS Dileepan, Shanmuganantham, Jeganathan, DayaLan Shanmuga, Vijayanand Subburaj, Tamil Dhasan, a couple of women, few others... and me. All images: Vareethiah konstantine.























TOP SLIP - EVERGREEN MEMORIES | With TN Green Artists. Day one. 10.09.2016

Three day Green Meet. September 2016. Participants:Dr. Jeevanandham (Erode), Prof KVKrishnamoorthi, Kaadodi Nakkeeran, Pamayan, Sadhasivam, Avainaayagan, Adv. T.MurugaveL, Prof MurgaveL, Aasaithambi, Valliappan, Veyyil muthuperumaL, N.Vinoth, G.Karuppaiah, Mohamed Riyaz, KS Dileepan, Shanmuganantham, Jeganathan, DayaLan Shanmuga, Vijayanand Subburaj, Tamil Dhasan, a couple of women, few others... and me.All images: Vareethiah konstantine.

Monday, 18 February 2019

நிலத்தைக் கொண்டாடுவோம். | வறீதையா கான்ஸ்தந்தின்

நிலத்தைக் கொண்டாடுவது என்பது நிலவுரிமை மறுக்கப்பட்டோரின் இன அடையாளத்தை, வரலாற்றுப் பங்களிப்பைக் கொண்டாடுவது; நாம் இயற்கையைத் தவறாகக் கையாண்டதால் பேரிடர்களுக்கு வித்திட்டோம்என்னும்உண்மையை  வெளிப்படையாக ஒப்புக் கொள்வது; பேரிடர்கள் திணைநிலக் குடிகளை அவர்களது பாரம்பரிய வாழிட - வாழ்வாதார நிலைகளிலிருந்து பெயர்த்தெறியும் ஆயுதமாகப் பயன்படுத்தும் அதிகாரவர்க்கத்தின் போக்குக்கு எதிராகக் குரல் எழுப்புவது; குடிமக்களின், இனி வரவிருக்கும் தலைமுறைகளின் பொதுச்சொத்து வளங்கள் தனிநபர் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாமல் கண்காணிப்பது; நிலம், நீர், காற்று, பல்லுயிர்ச் செழுமை நீடிப்பதற்கான மக்கள் அரசியலை முன்னெடுப்பது. 

Thursday, 14 February 2019

மீனவர்களிடம் யார் பேசுவது? | வறீதையா கான்ஸ்தந்தின்


Photo courtesy: Mohamed Rafi Maraikkayar, Maraikkayarpattanam. 

Photo courtesy: Mohamed Rafi Maraikkayar, Maraikkayarpattanam. 

Photo courtesy: Mohamed Rafi Maraikkayar, Maraikkayarpattanam. 

Photo courtesy: Mohamed Rafi Maraikkayar, Maraikkayarpattanam. 

இந்திய அரசியல் சூழலில் பல்வேறு அமைப்புகள் பாரம்பரிய மீனவர்களின் குரலாக, அரணாகச் செயல்படுவதாக உரிமை கோருகின்றன. நெருக்கடிக்கு காலங்களில் அவர்களுக்காக, அவர்கள் சார்பில் பல இடையீடுகளை நிகழ்த்துகின்றன. அரசோடு வாதாடிச் சாதிக்கத் துணிவு காட்டும்  இந்த அமைப்புகள் மீனவர்கள் தரப்பில் எழும் சிக்கல்களை எதிர்கொள்வதில் பின்னடைவு உள்ளது.

கடலைக் குறித்துப் பேசாதவரை இயற்கை குறித்த அக்கறைகள் முழுமை பெறாமல் நின்றுவிடும். | வறீதையா கான்ஸ்தந்தின்


பிப்ரவரி 1-3 இல் கோவையில் அண்மையில் நிகழ்ந்தேறிய   மேற்குத் தொடர்ச்சிமலைப் பாதுகாப்பு இயக்க மாநாட்டில் கலந்துகொண்டு சூழலியல் படைப்பாளிகள் அமர்வில் உரையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது.




கடலைக் குறித்துப் பேசாதவரை இயற்கை குறித்த அக்கறைகள்  முழுமை பெறாமல் நின்றுவிடும்.  மலைகளையும்   சமவெளி நிலங்களையும்  வான்வெளியையும்  இணைத்துநிற்கின்ற, உலகின் பருவநிலையைத் தீர்மானிக்கின்ற உப்புநீர்ப் பெருவெளி பெருங்கடல்கள்தான். நில மையப்  பார்வை கொண்ட வெகுமக்களின் கவனத்தைக் கடலின்மீது திருப்புவது சூழலியல் அக்கறைகளில் முதலிடம் பெறவேண்டும். வானத்தையும் நிலத்தையும் நீரையும் நாம் கையாளும் முறைகளில் நேர்ந்துபோன தலைகீழ் மாற்றங்கள், நீரியல் பருவச் சுழற்சியைத் தடம் மாற்றிக் கொண்டிருக்கின்றன.பருவநிலைப் பேரிடர்கள் தவிர்க்கமுடியாதஅபாயமாக உருவாகியுள்ளது. கிழக்கு நோக்கிப் பாயும்  மேற்கு மலைகளின் ஆறுகள் தீபகற்ப இந்தியாவின் நெற்களஞ்சியங்களின் உயிர்நாடியானவை. குறிஞ்சி, முல்லை வனங்களின் சிதைவில் தொடங்குகிறது இந்த ஆறுகளின், கடலின் சிதைவு.  இந்த சிக்கல்களின் கண்ணிகள் கடலோடு இணைத்துப் பார்க்கப் படவேண்டும் என்பது மிக முக்கியமானது.

மேற்குத் தொடர்ச்சி மலையைக் கொண்டாடும் இந்த ஒன்பதாவது மாநாடு ஒரு பகீரத முயற்சி. பழங்குடிகளின் அற்புதமான மரபறிவையும்   மதிப்பீடுகளையும் சமவெளிமக்களுக்குக் காட்சிப்படுத்துவது தொடங்கி, வயது, பாலினம், அறிவுக்குழு, பொருளாதாரத் தட்டுகள் என்பதான அனைத்துத்தரப்பையும் உட்படுத்திய அணுகுமுறை வெகு சிறப்பு. கண்காட்சி, கள அனுபவம், ஆய்வுரைகள், மக்கள் நாடகம் அனைத்தும் மக்களை மண்ணுக்கு இணக்கமாகக் கொண்டுசெல்லும்  அருமையான உத்திகளாய் அமைந்தது ஏற்பாட்டாளர்களின் இலக்கையும் நீண்டகால அனுபவத்தையும் வெளிப்படுத்தியது. ஆறு மாநிலங்களை உள்ளடக்கி   2000 கிமீ நீளமும் 1,90,000 சதுர கிமீ  பரப்பும் கொண்ட இந்த மலையை மக்களின் பொறுப்பில் ஒப்படைக்கும் பாரிய இலக்குடன் முப்பது ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டுவரும் இந்த இயக்கத்தின் இலக்கும் உழைப்பும் மகத்தானது. எதிர்கால நடவடிக்கைகளில் கடல் குறித்த கரிசனங்களையும் இந்த இயக்கம் பேசுபொருளாக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அதோடு, வன, கடல் பழங்குடிகளின் வாழ்வியலையும் மரபறிவையும் காத்திடும் முயற்சியின் ஒரு பகுதியாக மத்திய பழங்குடிப் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுமாறு இந்திய அரசினை இவ்வியக்கம் வலியுறுத்தவேண்டும்.

Wednesday, 13 February 2019

GAJA 2017. Mallippattinam images.


Visited Mallippatinam fishing harbour 80 days after Cyclone Gaja devastated this berthing facility. While repair and renovation works are on here, Mr Tajudin, a local fishermen leader provided us with images of the devastated port. Some of them are placed here.

Tuesday, 5 February 2019

“மீனவன் தீவிர அரசியலில் ஈடுபடதாவரை தீர்வுகள் சாத்தியமில்லை” நிறைவு பாகம் SBS Tamil. Australia



தமிழ்நாட்டின் நெய்தல் நில மக்கள், குறிப்பாக கடலோடிகள் குறித்து ஆய்வு செய்து தொடர்ந்து எழுதியும், பேசியும் வருகின்றவர் குமரியில் வாழும்  முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அவர்கள். பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் மற்றும் வள அரசியல் ஆய்வாளர் எனும் பின்னணிகொண்டவர். தமிழகம் நன்கறிந்த கட்டுரையாளர்; பல நூற்களின் ஆசிரியர். மீனவர்களின் பிரச்சனைகளை எளிய நடையிலும் இலக்கியமாகவும் பதிவுசெய்வதில் கைதேர்ந்தவர். வறீதையா கான்ஸ்தந்தின் அவர்களின் இல்லம் சென்று அவரை சந்தித்து நாம் நடத்திய உரையாடலின் நிறைவுப் பாகம். உரையாடியவர்: றைசெல். 

அரசின் கொள்கை, சட்ட, திட்டங்களில் மக்களுக்கு எதிரான வன்முறை விதைக்கப்படுகிறது - முதற்பாகம் SBS Tamil. Australia


 
தமிழ்நாட்டின் நெய்தல் நில மக்கள், குறிப்பாக கடலோடிகள் குறித்து ஆய்வு செய்து தொடர்ந்து எழுதியும், பேசியும் வருகின்றவர் குமரியில் வாழும் முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அவர்கள். பேராசிரியர் மற்றும் கடல் சூழலியல் மற்றும் வள அரசியல் ஆய்வாளர் எனும் பின்னணிகொண்டவர். தமிழகம் நன்கறிந்த கட்டுரையாளர்; பல நூற்களின் ஆசிரியர். மீனவர்களின் பிரச்சனைகளை எளிய நடையிலும் இலக்கியமாகவும் பதிவுசெய்வதில் கைதேர்ந்தவர். வறீதையா கான்ஸ்தந்தின் அவர்களின் இல்லம் சென்று அவரை சந்தித்து நாம் நடத்திய உரையாடலின் முதற்பாகம். உரையாடியவர்: றைசெல்.  

Sunday, 3 February 2019

பழங்குடிப் பல்கலைக்கழகம் | வறீதையா கான்ஸ்தந்தின்

கடலைக் குறித்துப் பேசாதவரை இயற்கை குறித்த அக்கறைகள்  முழுமை பெறாமல் நின்றுவிடும்.

விடியலை நோக்கி 2008 நேர்காணல்

  --------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...