எல்லோரையும் கவர்ந்திழுக்கும் கடல், வரலாற்றுக்கு முன்பே அதனுடன் ஒட்டி உறவாடி வாழ்ந்துவரும் கடலர்களுக்கு மட்டும் பேரச்சம் தருவதாகிக் கொண்டிருக்கின்றது. இயற்கைச் சீற்றங்கள் மனிதப் பேரிடர்களாக அவர்கள் மீது சுமத்தப்படுகின்றன.
-வறீதையா கான்ஸ்தந்தின்
சமவெளி மக்களின், அதிகார வர்க்கத்தின் மனசாட்சியைத் தொட முயற்சிக்கிறது வறீதையாவின் '1000 கடல்மைல்'.
-----------------------
சுனாமியோ, ஒக்கியோ- பெண்களுக்கு ஏன் இவ்வளவு பெரிய சுமையாக மாறுகிறது என்றால், பொருளாதாரத்தில் அவர்களின் பங்களிப்பு விலக்கப்பட்டிருக்கின்றன. அவர்களுக்கு வருவாய் ஈட்டும் வழிகள் அடைபட்டுப் போயிருக்கின்றன.
-மாலதி மைத்ரி.
---------------------
ஒக்கிப் புயல் ஒரு தடவை வந்து போய்விட்டது. அரசாங்கம் அதைத் திரும்பத் திரும்பக் கொண்டு வருகிறது. எங்க சனங்க திசை தெரியாமத் தவிச்சு நிக்குது.
-மேரிபுஷ்பம்.
----------------------
நாளை நாங்கடலுக்குப் போயி சம்பாதிச்சிட்டு வருவேன், நீ இண்ணைக்குக் கடன் வாங்கிக் காரியங்களைப் பாரு'ன்னு சொல்ல, ஒரு மாப்பிள இப்ப இல்ல.
-மேரிபுஷ்பம்.
------------—-------------------------------------------
கடற்கரைப் பெண்கள் வீட்டு வேலையைத் தாண்டிப் பொருளாதாரப் பங்களிப்பில் ஈடுபட வேண்டும். அது நடக்கவில்லை என்பது இந்தப் பேரிடர்ச் சூழலில் முக்கியமான சிக்கல். கணவரின் அகால மறைவு குடும்பத்தை ஆதரவற்ற நிலைக்குத் தள்ளிவிடுகிறது.
-முத்துச்செல்வி (செயல்பாட்டாளர்).
---------------------------------------
என் மவன் உசிரோடு இருக்கானோ இல்லியோ தெரியல... 18 வயசில போனது. இப்போ உயிரோட இருந்தா 44 வயசு. அவம் இன்னைக்குத் திரும்ப வந்தாலும் அவனால குடும்பத்துக்கு என்ன செய்ய முடியும்? கெடய்க்க வேண்டிய நேரத்தில நீதி கெடய்க்கலியே!
-மங்கையர்க்கரசி (72, தங்கச்சிமடம்).
-------------
என் ரெண்டு வயசுப் பொண்ணு தெனமும் ‘அப்பா எங்கே, அப்பா எங்கே’ன்னு கேட்டுட்டேயிருக்கா. அதுலியே நாங்க செத்துப் போறோம். என் வீட்டுக்காரரு காணாமப் போயிட்டாருன்னு சொல்றாங்க. அப்ப, காணாமப் போனவங்களத் தேட முடியாதா?...
-தீபிகா (22, தேவனாம்பட்டினம்)
--------------------------
குடும்பம் நிமிர்ந்து நிற்க வேலை
வாய்ப்பு வேண்டும். கணவனை இழந்த பெண் துணிந்து நிற்பதற்கு வேலைவாய்ப்புத் தருவதுதான் சரியான உதவி.
- மரிய கொலம்பியா.
-----------------------------
பிளஸ் டூவுல 950/1200 மார்க் வாங்கினேன். ‘நீ மேல படிச்சு எதுக்கு, ஒழுங்காக் குடும்பம் நடத்துற வழியப் பாரு’ன்னாரு என் வூட்டுக்காரர். நான் மேல படிச்சிருந்தா ஏதாச்சும் ஒரு வேலைக்குப் போயி எங்குழந்தைய வளக்கலாம். இப்ப என்ன பண்றதுன்னு தெரியலங்க.
-தீபிகா (22, தேவனாம்பட்டினம்)
--------------------
எனக்கு ஸ்கூலுக்குப் போற ரெண்டு பசங்க இருக்காங்க. புயல் வந்து ரெண்டு மாசமாச்சு, என் வீட்டுக்காரர் இருக்காரு, இல்லன்னு இல்லாம ரெண்டுத்துக்கும் பொதுவா என்னங்க சொல்றது?
அஞ்சலி (28, தேவனாம்பட்டினம்).
-------------------
ஆம்பளப் புள்ள இருக்கோ இல்லியோ, ஒருத்தி விதவை ஆயிட்டாளா, ஒடனே அவளுக்கு விதவை பென்ஷன் குடுத்துரணும். அது அரசாங்கத்தோட கடமை. எங்கள மாதிரி பெண்களத் தெருவுல பிச்சையெடுக்கிற நெலமைக்கித் தள்ளக்கூடாது.
-ஆஷியா பீவி.
-------------------------
வாழ்வாதார இழப்பிலிருந்து (பேரிடர்) விதவைப் பெண்கள் தங்களை எப்படி மீட்டெடுக்கிறார்கள் என்பது மிகப்பெரிய சவால்.
-வ.கீதா.
---------------------
மீனவர்கள் விளிம்புகளில் வாழ்பவர்கள். மீனவப் பெண்களோ, விளிம்பின், விளிம்பில் வாழ்பவர்கள். ஒரு மீனவப் பெண் துணைவரை இழந்துவிடும்போது ஒரு கூண்டுக்குள் அவள் அடைபட்டுப் போகிறாள்.
-பாத்திமா பாபு.
---------------------
கணவனை இழந்த, கணவனால் கைவிடப்பட்ட கடலோரப் பெண்கள் ஒருங்கிணைவதற்கான சூழலை ஏற்படுத்துவதுதான் இப்போதைய தேவை. தங்கள் சிக்கலுக்கான தீர்வுகளுக்கு அவர்களே இணைந்து குரலெழுப்புவதற்கான வாய்ப்புகளை நாம் உருவாக்கித் தர வேண்டும்.
-பாத்திமா பாபு.
---------------------------
முழுக்க முழுக்க ஆணைச் சார்ந்து
வாழும் கடற்கரைச் சமூகத்தில் பெண் குடும்பத் தலைமை ஏற்க நேரும்போது அவளுக்கு மூன்று விதமான சிக்கல்கள் ஏற்படுகின்றன- பொருளாதாரப் பிரச்சினை, குடும்ப நிர்வாகம், சமூகப் பிரச்சினை.
-லூயிஸ் லோபிதாஸ்.
-----------------------
ஒரு ஸ்மார்ட் ஆன ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகு உரிமையாளர் தனது மூலதனத்தின் பாதுகாப்பை உத்தரவாதம் செய்துகொள்ள வேண்டும், தனது படகில் உடன் தொழில் செய்யும் சக மீனவர்களின் உயிரையும் தன்னுயிரையும் பாதுகாத்துக் கரை திரும்புவதற்கான ஏற்பாடுகளை யோசிக்க வேண்டும்.
- சிரில் அலெக்ஸ் (43, மென்பொருள் பொறியாளர்) .
-------------------------
மீனவர்கள் தரப்பில் உயிர்ப் பாதுகாப்பு குறித்த அக்கறை உருவாக வேண்டும். பாதுகாப்பு விதிகளைத் தெரிந்துகொள்வதும் கடைபிடிப்பதும் முக்கியமானது.
-ஜான் பிரிட்டோ (43, மென்பொருள் பொறியாளர்).
-------------------
ஒரு உயிர்க்காப்பு மிதவை இருந்தால் நான்குபோ் (கடலில்) உயிர் மீந்து கிடக்கலாம்; ஒரு உயிர்க்காப்பு உடை அணிந்து கொண்டிருந்தால் சில நாட்கள் மிதந்து கிடக்கலாம்.
-தாமஸ் சூசை ஆன்றணி (சரக்குக்கப்பல் காப்டன்)
-------------------------------
(ஆழ்கடல்) மீனவர்களுக்கு ரேடியோ டெலிஃபோன் கொடுப்பதோடு, அவர்களின் பிரதேச மொழியில் வானிலைச் செய்தியைத் தொகுத்து வழங்கவும் எற்பாடு செய்யவேண்டும். இது அரசின் கடமை.
- மைக்கேல் நாயகம் (மீன்பிடி கப்பல் காப்டன்)
--------------------------
ஒரு திறமையான அரசாங்கம் நாங்கள் பாதுகாப்பாகக் கடலுக்குள் போய் மீன்பிடிக்க வசதி செய்து தரவேண்டும், போகாதே, புயல் வரும் என்று சும்மா மிரட்டிக்கொண்டிருக்கக் கூடாது.
-பயஸ்.
-----------------------------
எப்போதும் புயல் வருது, புயல் வருது என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. இரண்டு நாட்களுக்க முன்பாகவாவது சரியான எச்சரிக்கை தரவேண்டும். புயல் எங்கே, எப்போது வீசும், அது எந்தத் திசையில் நகர்ந்துபோகும் என்று எச்சரிக்கை தந்தால்தான் எங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.
-ஷாலோம்.
------------------------------
எத்தனையோ கப்பல்கள் ஒடிக்கொண்டிருக்கின்றன- சரக்குக் கப்பல் உட்பட. இந்தக் கப்பல்கள் எங்களுக்கு முன்னதாகவே செய்தி தந்திருக்கமுடியும். ‘இந்த இடத்தில் புயலடிக்கும், பாதுகாப்பாகக் கரைசோ்ந்துவிடுங்கள்’ என்று செய்தி தந்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.
-மைக்கேல் ஃபாரடே
-----------------------
கால்பந்து ஆட்டத்தில் வெளிப்படும் வேணாட்டு மீனவர்களின் சாகசம், அவர்களது ஆழ்கடல் மீன்பிடி சாகசப் பயணத்திலிருந்து முளைத்த ஒன்று. கற்பனை செய்ய முடியாத கடல் தொலைவுகளுக்கு இவர்கள் விசைப்படகுகளில் பயணித்துச் செல்கிறார்கள்.
-ஆல்பின் (33, மார்த்தாண்டன்துறை)
------------
முப்பது கடல்மைலுக்கு அப்பால் போகமாட்டோம் என்று சொல்லும் நேவி ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்: கரைகாணாக் கடலில் போய் மீன்பிடித்து நம்முடைய மக்களுக்கு உணவும் நாட்டுக்கு வருவாயும் தருகிற இந்த மீனவர்களைப் பாதுகாப்பது இந்திய அரசின் கடமை.
-ஆல்பின் (33, மார்த்தாண்டன்துறை)
------------
...மீனவர் பற்றிய விவாதங்களையோ பேச்சுகளையோ மீனவர் ஒருவரிடம் உறுதிசெய்துகொள்வதும் அதை ஆழமாகச் சொல்வதுமான போக்கு (ஊடகங்களில்) உருவாகியிருக்கிறது.
-அருள் எழிலன் (ஊடகர்
------------------------
கடல் பேரிடர்ச் சூழலில் ஊடகங்கள் எந்தக் கருதுகோளையும் உருவாக்கவில்லை; ‘கடலும் கடற்கரையும் மீனவர்களின் பாரம்பரிய உரிமைச் சொத்து, கடலோரத்தில் சுதந்திரமாக வாழ்வது எங்களது உரிமை’ என்பதான உரிமை சார்ந்த கருதுகோளை அரசுக்கு ஊடகங்கள் உணர்த்தியிருக்கவேண்டும்.
--------------------
மீனவனைப் பொறுத்தவரை நிச்சயமின்மைதான் வாழ்க்கையில் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. இன்று இரவில் பார்த்த கரை நாளை மாறிவிடுகிறது. இன்று கடலுக்குப் போனவன் நாளை திரும்பி வராமல் போய்விடலாம்.
-ஜான்பால், 28, திண்டுக்கல்.
-----------------------
கடற்கரை அனுபவத்தில் எனக்கு வியப்பூட்டிய விடயங்களில் ஒன்று, அந்த மக்களின் கட்டுக்கோப்பான வாழ்க்கை முறை.. பெண்கள் அங்கே மிகுந்த பாதுகாப்போடு வாழ்கிறார்கள்.
-ஜான்பால், 28, திண்டுக்கல்.
---------------------------
மீனவர்களின் வாழ்க்கையை இரண்டே இரண்டு விசயங்கள் தான் தீர்மானிக்கின்றன. ஒன்று கடவுள் நம்பிக்கை, இன்னொன்று உறவுகள்.
-----------------------
கடலரிப்பை முன்னிட்டு அலைவாயில் அடுக்கப்பட்ட இராட்சதக் கற்கள் குழந்தைகளுக்கும் கடலுக்குமான உறவை அறுத்துவிட்டது.
-----------------------
கடலின் பக்கத்தில் உட்கார்ந்து, கடலைக் கவனித்துத் தொழிலுக்குப் புறப்பட்ட காலம் போய்விட்டது. கடலரிப்பை முன்னிட்டு அலைவாயில் அடுக்கப்பட்ட இராட்சதக் கற்கள் குழந்தைகளுக்கும் கடலுக்குமான உறவை அறுத்துவிட்டது.
-ரோனல்ட், 26, கன்னியாகுமரி )
--------------------
கடல் மீனவர் வாழ்க்கையோடு கலந்து கிடக்கிறது. புயலோ வெயிலோ, வாழ்வோ சாவோ, கொண்டாட்டமோ சண்டையோ, எதுவும் அவர்களைக் கடலிலிருந்து பிரித்துவிட முடியாது.
---------------------
... ஆழ்ந்த நம்பிக்கையும் நிச்சயமின்மையும் மீனவர்களைக் கடலோடு பின்னிப்பிணைத்துக் கிடக்கிறது - கம்பீரமாக.
-ஜான்பால், 28, திண்டுக்கல்.
------------------+++++++++++----------------
பேரிடர்க் கதைகள் ஆண்கள் தரப்பிலேயே சொல்லப்பட்டு வந்துள்ளன. பொதுச்சமூகம் பேரிடர்களைப் பெண்ணின் கண்களினூடாகப் பார்க்கத் தொடங்கவில்லை.
-----------------------
அரசு நெருக்கடி கொடுத்தால் தொழிலாளா்கள் சங்கமாகத் திரண்டு போராடத் தொடங்கிவிடுவார்கள்... ஆனால் எதிர்காலமே சூனியமாகிப்போகும் நெருக்கடிகள் ஏற்பட்டபோதும் தமிழ் மீனவச் சாதிகள் ஒன்றுபடும் அறிகுறிகள் தென்படவில்லை.
--------------------------
ஒக்கிப் புயல் புலப்படா மக்களின் மீது கவிந்த புலப்படாப் பேரிடர். 2004 சுனாமிப் பேரிடர் போலன்றி, வருவாய் ஈட்டும் 230க்கு மேற்பட்ட மீனவர்களை ஆழ்கடலில் தேர்ந்து கொன்ற பேரிடர். பேரிடரின் துயரும் சுமையும் பெண்களைக் கரையில் அபலைகளாக்கி நிறுத்தியது.
----------------
நமது செயற்கைக்கோள் தொழில்நுட்பமும், இராணுவமும் மக்களின் உயிருக்கு மதிப்பளிக்காது என்றால் மக்களின் வரிப்பணத்தை தேசப்பாதுகாப்பின் பெயரால் ஏன் வீணடிக்கவேண்டும்?

வரிதையா என்றொரு மனிதனை இதற்காகத்தான் எழுத்துலகம் கொண்டாட வேண்டும்....
ReplyDeleteஇதை நூலில் படிக்கும்போது இரண்டு முறை மூடி வைத்துவிட்டு மீட்டு வாசித்தேன்...