Saturday, 27 May 2017
Saturday, 20 May 2017
Saturday, 13 May 2017
கடலம்மா பேசுறங் கண்ணு 02: பேரிழப்பு தந்தது என்ன?
அக்டோபர் 26, 2012. அது எங்கள் குடும்பத்துக்குத் துயரம் தோய்ந்த நாள். என் மைத்துனரின் மகன் லெராய், கோயம்புத்தூர் அரசுக் கல்லூரியில் இறுதியாண்டு பொறியியல் படித்துவந்தான். தனது பள்ளிக்கால நண்பர்கள் மூன்று பேருடன் இறச்சகுளம் பகுதிக்கு அவன் இயற்கைச் சுற்றுலா சென்றிருந்தான். ஒரு நண்பனின் வீட்டருகே ஆற்றில் மூழ்கி நால்வரும் இறந்துபோயினர். நான்கில் இரண்டு சடலங்கள் கைகோத்த நிலையில் நிகழ்விடத்துக்கு 100 மீட்டர் கீழே மூழ்கியெடுக்கப்பட்டன. இவனும் அதில் ஒருவன்.
Saturday, 6 May 2017
கடலம்மா பேசுறங் கண்ணு 01: முன்னோர்களின் கால்களைத் தழுவிய அதே நீர்
தொடுவானம் கதிரவனைச் சிவப்பினால் போர்த்த முயலும் அந்திவேளை. அலைவாய்க்கரையில் நின்றவாறு கடலின் பரப்பை நீங்கள் வியந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள். இந்தக் கணத்தில் தண்ணென்ற குளிர்ச்சியுடன் உங்கள் பாதங்களைத் தழுவி மீளும் கடல்நீர்,…ஒரு கட்டத்தில் துருவப் பனிமலைகளின் ஏதோவொரு பனிப்பாளத்தின் ஒரு பகுதியாக இருந்தது; பெருங்கடல் நீரோட்டங்களாய் உலகளாவிய பயணத்தில் இருந்தது; பஞ்சுப் பொதிகளென நீராவி வடிவத்தில் மேகமாக மாறி, வான்முகட்டைத் தழுவியலைந்தது; மலைமுகடுகளில் கனிந்து மழையாய்ப் பொழிந்தது; சுனை, சிற்றோடை, சிற்றாறு, பேராறு எனப் பெருகி, திணைதோறும் பலவகை நிலப்பரப்புகளைத் தழுவியணைத்து, தங்கி நின்று, கழிவெளிகளில் கலந்தது; மீண்டும் தாய்வீடு சேர்ந்தது.
Subscribe to:
Comments (Atom)
விடியலை நோக்கி 2008 நேர்காணல்
--------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...
-
* கையறுநதி / - வறீதையா கான்ஸ்தந்தின்/ கடல்வெளி வெளியீடு/ பக்கங்கள் : 196 விலை : ரூ. 220/-. நூல் அறிமுகம் : செ.கா. --------------------...
-
--------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...
-
கடலோரத்தில் ஒரு படைப்பு இயக்கம் என்னும் வேதசகாயகுமாரின் பார்வை சிந்திக்கற்பாலது. மாயக் கடு வளி தொகுத்த நெடு வெண் குப்பை நாஞ்சில் நாடன் ...



