‘கடலுக்கு முகத்தையும் நிலத்துக்கு முதுகையும் காட்டிப் பழகிய’ மீனவப் பெருங்குடி மக்களின் வசதிக்காக ஒருவேளை சட்டசபையும் பாராளுமன்றமும் கடலில் அமைக்கப்பட்டிருந் தால், மீனவர்கள் நம் ஆட்சியாளர்களை எளிதாக அணுகியிருப்பார்களோ; மீனவர்களின் வாழ்வியல் துயரமும் இன்னல் களும் குறைய வாய்ப்பிருந்திருக்குமோவென கசந்த நகைப்புக் கிடையே எண்ணத் தோன்றுகிறது.
Monday, 5 June 2006
Sunday, 4 June 2006
கடலோர வாழ்வெனும் கட்டுமரம் - எம். வேதசகாயகுமார்
வறீதையாவின் குரலை ஆழிப்பேரலைக்குப்பின் இயேசு சபை யைச் சார்ந்த ஜெயபதி அடிகளார் ஒருங்கிணைத்த கருத்தரங்கு களில் முதன்முதலாக என்னால் கேட்க முடிந்தது. ஆனால் இக்குரலுக்காக வெகுகாலம் நான் காத்திருந்ததான உணர்வு என்னுள் எழுந்தது. வறீதையாவுடனான என் நெருக்கத்திற்கு இதுவே காரணமாகலாம். இதற்கு நான் ஜெயபதி அடிகளார்க்கு நன்றி கூற வேண்டும். ஜெயபதி அடிகளாரின் பணியின் முக்கியத் துவத்தை அவர் சார்ந்துள்ள சமய அமைப்பு எந்த அளவிற்கு உணர்ந்துள்ளது என்னும் ஐயமும் என்னுள் எழுகிறது. கடலோர மக்களின் வாழ்வைக் குறித்து, அறிவுத்தளத்தில் உணர்வு ரீதியாக சிந்திக்கும் ஒரு குரலைக் கருத்தரங்கு எனக்கு அறிமுகப்படுத் தியது. ஒரு சமூகம் குறித்ததான சிந்தனை, அச்சமூகத்திலிருந்து தான் எழ வேண்டும். அச்சமூகம் சிந்திக்கத் துவங்குகிறது என்பதற்கான அறிகுறி இது. சமூகச் சிந்தனை ஒருங்கிணைக்கப் படும்பொழுது செயல்தளம் தானாக உருக்கொள்ளும். எந்த ஒரு மாற்றத்தினையும் வெளியிலிருந்து புகுத்திவிட முடியாது.
Saturday, 3 June 2006
Friday, 2 June 2006
Thursday, 1 June 2006
கடலும் நிலமும் : ஒரு மறுவாழ்வுத் தேடல்-ஹெச்.ஜி.ரசூல்
இயற்கைப் பேரிடர்களான பூகம்பம், நிலச்சரிவு, சூறாவளி, பெருவெள்ளம், சுனாமித் தாக்குதல் ஆகியவை பல்லாயிரக் கணக்கில் உயிர்களை எதிர்பாரா நிலையில் பலிவாங்கியுள்ளன. இதற்கொரு இணைதளத்தில் அணுகுண்டு வெடிப்புகளாலும் யுத்தங்களாலும் ஏவுகணை வீச்சுகளாலும் ஆக்ரமிப்பின் கொலை வெறித் தாண்டவங்கள் திட்டமிட்டே செயல்படுத்தப்பட்டு உயிர்களையும் வாழ்வையும் அழித்துள்ளன. குழந்தைகளையும் பெண்களையும் திரிசூலமுனைகளில் பலிவாங்கிய பயங்கர வாதத்தின் அச்சுறுத்தல் குஜராத்தில்கூட வெளிப்பட்டது. உயிர்கள் பலிவாங்கப்படும் இச்சம்பவங்கள், ஒருபுறம் இயற்கை இருப்பின் சமன்குலைவினாலும் மறுபுறம் சமுதாய இருப்பின் சமன்குலைவினாலும் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. எதிர்பாராதது திட்டமிடப்பட்டது என்பதான இரண்டு நோக்கங்கள் இச் சம்பவங்களில் தொழிற்படுகின்றன.
Tuesday, 25 April 2006
உணவு தரும் சமூகமும் நுகரும் சமூகமும் - செந்தீ நடராசன்
ஒரு பேரிடரும் அதைத் தொடர்ந்த சமூகச் சிக்கல்களும் கட்டமைப்பு முயற்சிகளும் முற்றாக ஒரு நிரந்தர, உறுதியான வாழ்க்கைக் கட்டமைப்பை நோக்கிய பலதரப்பினரின் சிந்தனை களை பேராசிரியர் வறீதையாவும் அருட்திரு. ஜஸ்டஸ§ம் மனோரீதியான ஈடுபாட்டுடன் தங்கள் எண்ணங்களை ஆவணப் படுத்தியிருக்கிறார்கள். ஆழிப்பேரிடருக்குப் பின் என்னும் இந்த ஆவணத்தை வாசிக்கையில் நான் நாற்காலிச் சிந்தனை யாளனாக உணர்கிறேன்.
Friday, 31 March 2006
அலையாத்திகாடுகளில் நுழைந்து திரியும் பட்டாம்பூச்சிகள் ஹெச்.ஜி.ரசூல்
அலையாத்திகாடுகளில் நுழைந்து திரியும் பட்டாம்பூச்சிகள் : முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின் அளித்த ‘நெய்தல் மண்ணுக்கோர்சாசனம் - எழுத்தாளர் ஹெச். ஜி. ரசூல் திண்ணையில் எழுதிய பதிவு.
Subscribe to:
Comments (Atom)
விடியலை நோக்கி 2008 நேர்காணல்
--------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...
-
* கையறுநதி / - வறீதையா கான்ஸ்தந்தின்/ கடல்வெளி வெளியீடு/ பக்கங்கள் : 196 விலை : ரூ. 220/-. நூல் அறிமுகம் : செ.கா. --------------------...
-
--------------------- பாதிரியார்களிடம் இருப்பதாக நம்பப்பட்ட மந்திரக்கோல் வெறும் மாயை என்ற புரிதல் எழுந்துள்ளது. ----------------------...
-
கடலோரத்தில் ஒரு படைப்பு இயக்கம் என்னும் வேதசகாயகுமாரின் பார்வை சிந்திக்கற்பாலது. மாயக் கடு வளி தொகுத்த நெடு வெண் குப்பை நாஞ்சில் நாடன் ...